பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தகடூர் யாத்திரை


சிதா அர் - சீரை. நீனிறச் சிதர் அர் களைந்து (புறம் 385 கல்லாடனார்): தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி (புறம் 393 நல்லிறையனார்); துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்னரைப் புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ (புறம் 398 திருத்தாமனார்); என்பவற்றும் இதே பொருள்படச் சிதா அர்’ வருதலைக் காணலாம்.

'ஏற்றிரந்து உண்டல் துறவுநிலையின் தன்மை,

"நூற்றிதழ்த் தாமரை" தாமரையுள் சிறந்தது; மலருள் சிறந்தது தாமரை அதனுள்ளும் சிறந்தது நூற்றிதழ்த் தாமரை அதைப் போன்ற சிறப்பினர் எனவே, மிகவும் சிறப்பான துறவுநிலையினைக் கொண்டவர் என்பதாம். -

"தீயவை ஆற்றுழி ஆற்றி” என்பதற்கு முத்தி வகைகளையும் முறைப்படி பேணிச் செய்யும் கடமைகளைச் செய்து எனலும் பொருந்துவதாம்.

6 துவர் - கருஞ்சிவப்பு நிறம்.

'உருவம் தமக்குத் தாம் ஆய நிலையாவது, உடற் பற்றினின்றும் நீங்கி அதனைத் தம் கருத்தாற் கழித்தற்கும் சக்தியுடைய யோகநிலையினர் என்பதாம்.

'ஒரு உகமாத்தே இதனைச் செய்தலைக் குறித்தே நீங்கிப் போக என்பது கருத்து. - .

இச்செய்யுளால், நீத்தாரது பெருமை கூறப்பெற்றது.

3. இரத்தலின் இழிவு!

இரத்தல் என்பது மிகவும் இழிவான ஒரு செயலாகத் தமிழ்ச் சான்றோரால் ஒதுக்கப்படும். இதன் இழிதகைமையையும் உணர்ந்து, அதனையும் மேற்கொள்ள ஒருவர் துணிந்தனர் என்றால், அவரது நிலைமை மிகவும் வருந்துதற்கே உரியதாகும். அங்ங்னம் வந்து இரந்தவர்க்கு மனமுவந்து ஈவதுதான் மனிதரின் கடமை எனப்படும். -

நூற்றுவர் இல்லங்களுள் சென்று தோன்றி இரந்து நிற்கும் துணிவுடையவர்க்கு ஒருபோதும் பசிக் கவலை கிடையாது. அத்தகைவர் ஆயிரம் பேர் திரண்டிருந்து ஒரு செயலைச் செய்வதற்குக் கூடியிருக்கும் அவையிடத்தாயினும், அவர் தம் பசிக்கு மாற்றந்தரும் ஒரு பொருளை உவந்து கொடுக்கின்ற மகன் ஒருவன் நாட்டிடத்தே தோன்றாமற் போகான். ஆகவே, அவன் உணவிற்குக் கவலைப்படுதல் வேண்டாம் என்பதும் மெய்தான்.