பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தகடூர் யாத்திரை


அந்த நிலையிலே, அவனுடைய அரசப் பிறப்பும்கூட அவனால் வெறுக்கப்படுகின்றது. .

தமிழ் முழுதுணர்ந்த சேரமானின் உள்ளச் செவ்வியிலே மறநெறி மாண்பைப் பெறுவதினும் காட்டில், அறநெறி பெருக்கிச் சிறப்பெய்துகின்ற ஆண்மைச் செவ்வியே மேலெழுந்து விளங்கக் காண்கின்றோம்.

இந்த நிலை பாரதப் போர்களத்துள் அருச்சுனன் நின்று கவலையுற்றுச் சேர்ந்த நிலைக்கு ஒப்பாகும். இவர்கள் பலரும் உறவினரும் நட்பினரும் மற்றும் அன்பினரும் ஆவர். இவரைக் கொன்று பெறும் வெற்றி எனக்கு வேண்டுவதில்லை’ எனச் சொல்லித் தளருகின்ற அருச்சுனருக்கு ஒப்பாகவே, அதிகன்பாற் போர்க்கு எழுகின்ற சேரலனும் வருத்தமுறுகின்றான். இதனை நாம் அறிந்து போற்றல் வேண்டும்.

6. புல்லலின் ஊடல் இனிது

தகடூர் அதிகமானின் அளவிறந்த பெரும் புகழையும், பெருந்தன்மையையும், பேராண்மையையும் நன்றாக உணர்ந்து, தன் குடியினருள் ஒருவன் அத்தகு சிறப்பினனாகத் திகழ்தலை எண்ணி ஒரு பால் மகிழ்ச்சி கொண்டவனும் சேரமான் பெருஞ்சேரல் ஆவான். எனினும், அரசின் கடமை தனக்கு உட்பட்ட நாடொன்று தன் மேலாட்சியை உதறித்தள்ளி நிமிர்ந்து நிற்கும்போது, அதனை வணக்கித் திறைகொள்ளும் கடனிற் செலுத்த, அதனை ஒதுக்க முடியாதும் அவன் கவலையுறுகின்றான்.

அவனுடைய மனநிலையை நன்குணர்ந்த சான்றோர் அரிசில்கிழார். ஆகவே, அவர் தாமே நேரிற் சென்று அதிகனைக் காண்பதாகவும், நிலைமையை விளக்கி அவனை நெறிப்படுத்த முயல்வதாகவும் கூறச் சேரமானும் அவரது முயற்சிக்கு ஆதரவு தருகின்றான். . .

தகடூர் சென்ற அரிசில்கிழாரை அதிகமான் தமிழ்ச் சான்றோர் என்ற வகையில் உவப்புடன் வரவேற்று உபசரித்தனன் எனினும், அவனுடைய ஆண்மைப் பெருக்கம் சேரலனுக்குப் பணிந்து வாழ்வதற்கு இசைய மறுக்கின்றது. அவன், தன் நிலையில் உறுதியாகவே இருக்கின்றான்.

அரிசில்கிழார் ஒளவையார் போன்ற அறிவுடைச் சான்றோர்களது உரைகள், அவனை ஒருவாறு தன்னை உணரச் செய்தபோதும், அவனுக்கு அணுக்கராயிருந்த அரசகருமத்