புலியூர்க் கேசிகன்
45
தலைவர்கள் பலரும், சேரமானுக்குப் பணிவதினுங் காட்டில், அவனை எதிர்த்து அழிவதே சால்பெனப் பேசி உறுதியோடு அமைகின்றனர். அவர்களுடைய உறுதி இயல்பிலேயே மாவீரனாகிய அதிகமானையும் திண்மை கொள்ளச் செய்கின்றது. - - r
அரிசில் கிழார் தம்முடைய முயற்சியிற் பயன் காணாதவ ராக வேதனையுடன் திரும்புகின்றனர். சேரல் அவரிடம் தூதின் முடிபை வினவ, அதனை யுரைத்து அமைகின்ற அவருள்ளம், தமக்குச் சார்பாக பேசிநின்ற அதிகனின் தேவையை அச்சமயத்திலே நினைக்கின்றது. -
'அம்மையே அதிகன் மாவீரன் எனினும் பெருஞ்சேரல் இரும்பொறையோடு பொருது வெற்றி கொள்ளும் வாய்ப்பு இல்லாத குறுநில வேந்தன் என்பதனை மறந்து விடுகின்றனன், என் சொற்களின் பயனையும் உணர்ந்தானில்லை. சொல்லுக்கு சொல் வெல்லுஞ் சொல்லறிந்து சொல்லியும், பலரும் பழித்த சொற்களை விலக்கிச் சொல்லியும் அமைகின்றனனே அல்லாமல், எம்போல் தூய்மை சிறந்த நல்லநெறிக்கு இசைந்த உறுதியினைச் சொல்லக்கேட்டு நிற்பார்க்கு இனிதான இசை வினைச் சொல்வான் அல்லன் எனக் கூறி நொந்துகொண்ட நிகழ்ச்சியையும், அதனைக் கேட்டதும் அதிகனின் தேவி தன் தோழிபால் தன் நிலையை வெறுத்துக் கூறிய சொற்களையும் அவர் நினைவு கூர்கின்றார்.
தன் கணவனின் நல்வாழ்விற் கவலைகொண்ட அந்தத் தேவியின் சொற்கள், அவரைப் பெரிதும் இரக்கங் கொள்ளச் செய்த அந்த நிலையையும் நினைக்கின்றார். அவர் கண்கள் நீரால் நிரம்புகின்றன. - -
'ஐயன்மீர்! தம் முயற்சி பலன் தரவில்லை. இனிப்போர்தான் செய்தற்குரியது. தாங்கள் கலங்குவதேன்?’ என்கின்றான் சேரமான். . .
அதிகனின் தேவி சொன்ன சொற்களை நினைவிற் கொண்டேன்; என் உள்ளத்தை விட்டு அகலாத அச் சொற்கள் என்னைக் கசிந்து உருகுமாறு செய்கின்றன என்றவர், அதனை அவனுக்கும் உரைக்கின்றார். - .
சொல்லுங்காற் சொல்லின் பயன்காணும்; தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும், பல்லார் பழித்தசொல் தீண்டாமற் சொல்லும்; விழுத்தக்க கேட்டார்க்கு இனியவாச் சொல்லானேல் - பூக்குழலாய்