புலியூர்க் கேசிகன்
47
"யாது சொல்லினும் அவன் நினக்குத் தம்பியாகும் முறையினன். ஆகவே , இயன்றவரையும் அவனுக்கு அறிவுரைகளை எடுத்துச் சொல்லி, அவனது அறியாமையை போக்குதலே முதற்கண் மேற்கொள்ளற்கு உரியதாகும். புலியூர்க்கேசிகன் “அஃதன்றிச் சிறுமைப்பட்டதோர் அரசமுறையினை மேற்கொண்டு, அவன்மேற் படைகொண்டு செல்லுதல் வேண்டப்படுவதொன்று ஆகாது. - "அறிவுரை கூறித் தெளிவிக்கும் அதனைச் செய்தல்தான் அரசநெறியினை அறிந்துகூறும் சான்றோர் ஏற்புடைத்தாகக் கண்ட முறையாகும்” என்கின்றனர். கால வெகுளிப் பொறையகேள் தும்பியைச் சாலுந் துணையும் கழறிச் சிறியதோர் - கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா, அதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி. - (புறத். 776) இதன்மேற். சான்றோர் தூதுரைத்து வருதலை மேற்கொள்ளற்குச் சேரமான் இசைவளித்தனன் என்பதும் அவரும் சென்று முயல்வாராயினர் என்பதும் அறிய வேண்டுவதாம். - - 'நூல் என்றது, அரசியல் நூல்களைக் குறிப்பிடுவதாம். 8. அடங்கல் வேண்டும் சான்றோர்கள், பெருஞ்சேரல் இரும்பொறையின் இசைவோடு, தகடூர்க்குச் சென்று, அதிகமானிடம் தூது உரைத்து நிற்கின்றனர். திறை என்பது மேலரசின் தகுதியை ஏற்கும் ஒரு குறிப்பேயன்றி, அதனால் அதிகனுக்கு வந்துறும் இழிவு யாதுமில்லை எனவும் கூறுகின்றனர். மேலும், பெருஞ்சேரல் முறையால் அவனுக்கு அண்ணன் ஆகின்றதையும் எடுத்துக்காட்டி, மூத்தோனுக்கு இளையவன் பணிந்து போவதனால் வந்துறும் இழிவேதும் இல்லையெனவும் வாதிடுகின்றனர். - அதிகமான் சான்றோரின் உரைகளைப் பொறுமையுடன் கேட்டாலும், அவன் உள்ளம், தன்னாண்மையுடன் மேலோங்கி நிற்கின்றது. 'தம்பி என்பவர், என் நாட்டை முழுவுரிமையுடன் திகழ்தற்குத் தாமே விட்டு விடலாமே எனச் சீற்றத்துடன் கேட்கின்றான். அதனால், சோழவரசு பிற குறுநில . மன்னர்களிடையே தனது செல்வாக்கை இழந்துவிடல் நேரக் கூடும் என்பதை யேனும், கழுவுள் போன்றோர் குறும்பு செய்து