பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

49


கழிவிரக்கம் கொண்டவராய் பன்னியுரைத்துப் பரிவுடன் வேண்டினார். இந் நன்மொழியையும் ஏற்றுக்கொண்டானல்லன் - பொறையனின் இளையன். புலவர் புண்பட்டார். இரும் பொறை வேந்தனை வேண்டிய பான்மையையும் அவன் பொறை கொண்ட மாண்பையும் உள்ளினார். தக்க பல சான்றோர் களையும் தம்துணையாகக் கொண்டு முயன்றார். எவ்வாறேனும் குடியழிவைக் கெடுத்தல் வேண்டும் என்பதே குறியாகப் பணி செய்தார். அவர்தம் முயற்சியில் தோல்வியே கண்டார்.

இந்தச் செய்யுளை மிகவும் நன்றாகவே நாம் கவனிக்க வேண்டும். இதன்கண் சொல்லப்படும் அறிவுரையானது, ஒன்றை எதிர்த்து ஒரு செயலைச் செய்யும் பொழுதெல்லாம், நம் உள்ளத்துள் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிலைபெறுதலும் வேண்டும். வெற்றிப்பாதைக்கு நம்மைச் செலுத்துகின்ற சிறப்பு இதற்கு உண்டு. - - -

நெற்றிப் பட்டங்களைச் சூட்டியவையாயும் அவை விளங்கும். இந்த யானைத்திரள் அந்நாளைய போரின் கண் மிகவும் முதன்மையான படைப்பகுதியாக இருந்தது. அதிகனின் இந்தப் படை வன்மையைக் குறிப்பிடுவாராகவே,

ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய - வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே!.

என அவனை விளித்துத், தாம் சொல்லப்போகும் அறநெறியை ஆன்றோர் உரைக்கின்றர்.

"இந்தச் சூழ்நிலையிற் செய்வதென்ன என்று கேட்பாயானால், அதனைப் பற்றியும் கூறுவோம் கேட்பாயாக' என்ற பீடிகையுடன் செய்தி சொல்லப்படுகின்றது.

"இருதலைப் புள்" என்ற ஒன்று. அதன் இருபுறமும் தலை இருந்தாலும் அதன் வயிறு ஒன்றேயாகும். அந்த ஒரு வயிற்றின் கண் இரு பக்கத் தலைகளானும் கொள்ளப்படுகிற உணவுதான், அதற்கு உணவாக அமைகிறது. இரண்டு தலைகளாலும் உண்ணினும், அந்த உணவு முழுதும் ஒரே வயிற்றிடந்தான் சென்று சேர்கிறது. அதற்கு உயிரும் ஒன்றே ஒன்றுதான். இங்ங்னம், இரண்டு தலையாற் கொள்ளப்படும் உணவுகள் ஒரே இடத்தை அடைகின்றதே என்பது குறித்து, அந்தப் பறவை ஒரு போதும் வருந்துவதில்லை. அதுதான் அதன் இயல்பு. அந்தப் பறவையைப் போன்றவன்தான் ஒரு வகையில் நீயும் ஆவாய்.

"பகைவர் படையணிகள் நின் நாட்டைச் சுற்றி வளைத்துள்ளன. நின் நாட்டகத்தினின்றும் நீ வெளியேறிப்