உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



50

தகடூர் யாத்திரை


போதற்குரிய வழியும் ஏதும் இல்லாதாகப் போய் விட்டது. இங்ங்னம், வெளியே போய்வரும் வழியும் கேட்டுப் போதலைக் கண்ணுறுகின்ற பொழுதினும், நீ அது கருதியும் அஞ்சிப் பகைவர்க்கு பணிந்து போவாயல்லை! நின்னைப் பற்றி நினக்கு அழிவைத் தருவதாகின்ற சினத்தையே நின்பால் மிகுதியாகக் கொண்டுள்ளனை! நின்னாற் பொறுத்தற்கு இயலாதவாறு அதுவும் வெளிப்பட்டு வருதலை யாம் நின்னிடத்தே காண்கின்றோம். - - "உடுக்கை இழந்தவன் கைபோல, அவ்விடத்தையே உதவுதல் சிறந்தது” என்பார்கள். அதுவும் நின்னளவில் உண்மையேயாகும். பகைவரால் வளைக்கப் பெற்றுத் துயர் வாய்ப்பட்டுள்ள நின்னுடைய ஊருக்கு, அங்ங்ணம் கைபோலச் சென்றடைந்து நீ துணையாகி நிற்கின்ற அருளினையும் நின்பாற் கொண்டவனாக இருக்கின்றனை 'சேரமானோ, நின்னினும் வேறுபட்ட குடியினனும் அல்லன் நின் குடியினையே சார்ந்தவன். நினக்கு அண்ணனாகின்ற ஓர் உறவுமுறையினனும் ஆவான். நினக்கு ஒரு துன்பமானது பிறரால் முற்பட்டு வருவதனால், நினக்குத் துணையாக அமைந்து, அதனை விலக்குவதற்கு முற்படுகின்ற ஒரு கடமைப்பாட்டையும் அவன் உடையவன். "அத்தகைய அவனோடு பகைமை கொண்டு போரிட்டு அழிவதற்குத் துணிதல் நினக்குச் சிறப்பன்று." "பகையாகி வந்து வளைத்துள்ளான்; அவன் அண்ணன் முறையினனே ஆயினும் ஆகுக! அவனை எதிர்த்துநின்று வெல்வது, அல்லது போரின்கண் அழிவது என்பதுதானே வீரனின் கடமை” என்று கருதி, நீ நின் கோட்டையைக் காத்து நிற்கும் முயற்சியில் உறுதியாக இப்போது ஈடுபட்டுள்ளனை. நீ தொடங்குதற்கு உரித்தான காத்தற்செயல் என்பது பெரிதான புகழுடையதே என்றாலும் நீ இங்ங்னம் கொதித்து எழாமல் நின் அண்ணனுக்கு அடங்கிப்போவது தான் நினக்கும் நின் நாட்டிற்கும் நன்மை தருவதாகும். "பேர் யாற்றின்கண் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடிச் செல்கின்றது. அதனை கடக்கத் துணிவு கொள்கின்றான் ஒருவன். பிறர் வேண்டாவெனத் தடுக்கவும் அடங்கானாய், ஆற்று வெள்ளத்துள் குதித்தும் விடுகின்றான் “வேறு துணையாவாரும் எவரும் இல்லை. தன்னந் தனியாகவே அவன் நீந்துகின்றான். இடையிற் களைத்தால், அவனைத் தாங்கிக் காத்தற்கு ஒரு புணையும் இல்லை. அந்த