புலியூர்க் கேசிகன்
51
நிலையில், அவன் ஆற்றின் போக்கோடு தாழ்ந்து சென்று, அதனைக் கடத்தலன்றோ செய்ய வேண்டுவதாகும். ஆற்றின் போக்கிற்கு எதிராகவே நீந்திச் சென்று கடப்பேன்’ என அவன் சொல்லி முயல்வானாயின், அவன் ஆற்றைக் கடக்கமாட்டாது அழிவான் அல்லனோ? அப்படி எதிர் நீந்தத் தலைப்படுதல், ஆற்றைக் கடத்தற்கு அரிதாகிப் போகின்ற ஒரு செயலும் அல்லவோ? - "ஆகவே, நீ நின் அண்ணனைப் போரிடத்தே வெற்றி கொள்ளக் கருதினாய் ஆயினும், இவ்வேளையில் நீ மேற்கொண்ட போர்ச்செயலைக் கைவிட்டு, அவனுக்கு அடங்கப் பணிந்து போகுதலே செய்யக்கூடிய தாகும். அதுவே நீ அவனை வெற்றி கொள்ளுதற்குரிய சிறந்த வழியும் ஆகும். இவ்விடத்தே எதிரிட்டுப் பொருத முற்படும் உங்கள் இருவரது நிலைகளையும் சீர்தூக்கிக் காண்பார்க்கு, இதுவே செய்யத் தக்கதாகத் தோன்றுகின்றது. ஆகவே, அதிக நின் போர் முயற்சிகளைக் கைவிட்டுச் சேரலனுக்கு இவ்வமயம் தாழ்ந்து போவாயாக!” - இவ்வாறு, ஆன்றோர் அதிகமானின் நன்மை கருதிப் பலவாறாக எடுத்துரைக்கின்றனர். எனினும், போர் மறத்தால் மாண்புற்றிருந்த அவன்பால் இந்த அறவுரைகள் யாதும் பயனளிக்கவில்லை. பகையுணர்வும் வெஞ்சினமும் மிகுதியாகி உள்ளத்தே திண்மைகொண்டு நிரம்பியிருந்தன. அவ்னிடத்தே, போர் என்னும் ஒன்றுதான் தன்னாற் செய்தற்கு உரியதென்ற முடியும் அழுத்தமாக நிலைபெற்று விட்டது. ஊழின் வலிமையை நினைந்து, அதன் வழியே தான் எல்லாம் நிகழுமென அமைந்து, சான்றோரும் தமக்குள் வருந்தி நலிபவராயினர். • , 9. வேந்துடை அர்ண் அதிகமானின் முடியினைத் தெரிந்ததும், பாசறைக் கண் வீற்றிருந்த சேரமான் தகடூர்க் கோட்டையைக் கைப்பற்றுவதற் குரிய முயற்சிகளைக் கவனிக்குமாறு, தன்படைத் தலைவர்கட்கு ஆணை பிறப்பிக்கின்றான். ஆணை பெற்ற படைத் தலைவர்களும், போர் வெறியாற் சினந்தாராகித், தகடுர்க் கோட்டையை அணுகுதலான முயற்சிகளிலே ஈடுபடுதற்குத் தம் கருத்தை செலுத்துகின்றனர்.