புலியூர்க் கேசிகன்
53
‘விளங்கும் மாலையினைக் கொண்ட மார்பினை உடையவனே! ஆனால் ஒன்றை மட்டும் நீ நினைத்தாயில்லை. அதிகமான் என்னும் வேந்தனிருக்கும் அரணினை நீ எவ்வழியாற் சேர நினைத்தாலும், அது நின்னால் நெருங்குதற்கும் அரிதாகும் என்பதனை மட்டும் நன்றாக அறிவாயாக -
'இங்ங்னம் யாம் சொல்வது, நின் தகுதியைக் குறைவாக மதிப்பிட்டதாக ஆகாது. ஆயின், அதிகனின் படை மறவர்கள் அத்துணை மறமாண்பினை உடையவர்கள் என்பதனை யாம் அறிவோம்.
'திண்மையும் கூர்மையும் உடைய வேற்படையினை ஏந்தியவராகத் தம் மதிலை அணுகுகின்ற பகைவர்களைக் காணின் அதிகனின் மறவர்கள் பணிந்துபோகும் பான்மையர் அல்லர். இவ்வழி என்பதொன்றன்றி, எவ்வழியால் மதிலைப் பகைவர் அடைய முயன்றாலும், அவ்வவ் வழியிடம் எங்கணுமே தோன்றித் தடுத்து நிற்கும் போர் வன்மை கொண்டவர்கள் அவர்கள்.
'புண்பட்ட உடலினோடும் அயராது பகைவரிடைப்புகுந்து சென்று, பகைவரது பசிய தலைகளை அறுத்துக் களிக்கின்ற ஆண்மையாற் சிறந்தவர்களும் அவர்கள் ஆவர். அத்தகைய கைவன்மையினைக் கொண்டவரும், ஆண்மை சிறந்தவருமான மறவர்கள் மிகுதியாக விளங்குவது அதிகமானின் படை என்பதனையும், அதனால் தகடுர்க்கோட்டையைப் பிறர் அணுகுதற்கும் இயலாது என்பதனையும் தெளிவுறவே அறிவாயாக. . - .
பொன்முடியாரின் இந்த உரையானது சேரமானின் போர் வெற்றியைத் தணித்துவிட வில்லை; அவன் சீற்றம் இதனைக் கேட்டதும் மிகுதியாகவே வெளிப்படுகின்றது. அத்தகைய வலிவுட்ையானை வெல்வது தான் எனக்கும் ஆண்மையாகும்.' என்று கூறி, அவன் சிரிக்கின்றான். அது வஞ்சினத்தாற் கிளர்ந்து வரும் சிரிப்பாதலை உணர்ந்த பொன்முடியாரும் விதிவிட்ட வழி என நினைந்தாராக அமைகின்றனர்.
மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென வையகம் அறிய வலிதலைக் கொண்ட(து) இவ்வழி யென்றி இயல்தார் மார்ப! எவ்வழி யாயினும் அவ்வழித் தோன்றித் திண்கூர் எஃகின் வயவர்க் காணின் புண்கூர் மெய்யின் உராஅய்ப் பகைவர் பைந்தலை எறிந்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்து, பிறர் . தீண்டற் காகாது, வேந்துடை அரனே! )ZAz2 اریک تر به ژی(