பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

55


வலியுடைய ஆடவர் அனைவருமே உழுதொழிலை மறந்தன ராகிச் சேரப்படையணிகளிலே மறவராக விளங்கு கின்றனர். எதிர் பார்த்தபடி போரும் விரைய நிகழ்ந்து முடிவு பெற்று விட்டதென்பதும் உண்டாகவில்லை. நாட்டின் செழுமைக்கு உழைக்க வேண்டிய நற்குடியினரான ஆடவர் பலரும், இப்படித் தம்முள் ஒருவரையொருவர் வெட்டிமாய்த்துக் கொள்ளுகின்ற போர்நாட்டத்தினராகக் குழுமியிருக்கும் பாசறைக் காட்சியினைக் காணும்போது, அறிஞரின் உள்ளம் பெரிதும் வேதனை அடைகின்றது. ஆக்கவேலையிற் செலுத்தவேண்டிய ஆண்மையை அழிவின்கண் செலுத்தும் அரசுகளின் போக்கினை நினைந்து குமுறுகின்றது. அவர்களுள் ஒருவர் சேரமானுக்கு இந்த அடிப்படையினை உணர்த்துவாராக, நின் நாடு புது வருவாயினை உடையதாகுக என வாழ்த்துகின்றனர்.

'அகன்ற இடத்தையுடைய சேரலாகிய அவனுடைய நாடு. அந் நாட்டின்கண் நீர் பெருக்கம் விளங்குமாறு மழை வளம் சிறப்பதாக!

'பெரிய நிலத்தின்கண் இட்ட வித்துக்கள் குறைவின்றி முளைவிடுமாக முளைத்த முளைகள் வளர்ந்து செழிக்குமாறு, மழையானது முட்டுப்பாடின்றி வந்து பெய்யுமாக

இங்ங்னம் காலத்தால் மழை பெய்து, ஏதும் வாட்டம் வந்து பொருந்தாமற்படிக்குப் பயிர்கள் கிளைத்து வளருமாக அக் கிளைகளுள் எல்லாம் கதிர்கள் பாலேற்று முதிர்ந்து தலைதாழ்ந்து, முற்றிய கதிர்களை ஈனுமாக!

"அங்ங்னம் ஈன்ற கதிர்கள் அரிதலைப் பெற்று, ஏரினால் வளஞ்சிறக்கும் செல்வர்களுடைய களத்தின் கண் வந்து நிறைக! அக் களங்களின்கண் வந்து நிறைந்து இடப்பட்டுள்ள நெற்போர் எல்லாம் காவலின்றியே விளங்குமாக’

போரினை அடித்து நெல்லினைக் கொள்ளுங் காலத்துப் போர்களத்தே நின்றும் எழுகின்ற அச்சங்கெழுமிய உழவர்களின் ஆரவார ஒலியைக் கேட்டு, நாரையினங்கள் வெரீஇத் தம் பெடையோடுவிளைவயல்களினின்றும் நீங்கிப்பறந்துபோமாக இங்ங்னம், அவன் அகன்ற நாட்டின்கண் எவ்விடத்தும் புதுவருவாய் பெருகுக!

பெருநீரால் வாரி சிறக்க, இருநிலத்(து) இட்டவித்து எஞ்சாமை நாறுக; நாற்ார முட்டாது வந்து மழைபெய்க; பெய்தபின் ஒட்டாது வந்து கிளைபயில்க, அக்கிளை பால்வார் பிறைஞ்சிக் கதிரீன; அக்கதிர்