பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தகடூர் யாத்திரை


ஏர்கெழு செல்வர் களம்நிறைக; அக்களத்துப் போரெலாங் காவாது வைகுக: போரின் உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு நாரை பிரியும் விளைவயல் - - யாணர்த் தாகவவன் அகன்றலை நாடே. (புறத். அது களமர் போரடித்தலால் எழுகின்ற ஒலி பெருகி இருக்க வேண்டிய நாட்டிலே, மறவர் போர்முழக்கின் ஒலியே மிகுதியாக எழுந்து கொண்டிருந்தது கண்டு மனம் வருந்திச் சான்றோர் உரைக்கும் அருமையான செய்யுள் இது. அன்றிச் சேரமானைக் கண்டு பரிசில் பெற்றோர் ஒருவர், அவன் நாடு வளம் பெருகுக என வாழ்த்தியதாகவும் இதனைக் கொள்ளலாம். ¤. புல்லறிவு - பேதைமையாவது ஓரளவு சகித்துக் கொள்ளக் கூடியது. ஆனால், தான் தவறாகக் கொண்ட தொன்றையே சரியெனச் சாதித்து நிற்கும் புல்லறிவோ மிகவும் வெறுக்கக் கூடியதாகும். தகடூர்ப் போருக்காக சேரர் படையினர் குழுமியிருந்த பாசறைக்கண், ஒரு சமயம் போர்த்திட்டத்தைப் பற்றிய ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது, போரது பலவகைக் கூறுபாடுகளையும் ஆராய்ந்தறியாமல், தாம் ஒன்றைத் தவறாகப் புரிந்துகொண்டு அதனையே வலியுறுத்திப் பேசிக்கொண்டிருக் கின்றனர் சிலர். இவர்களின் போக்கினைக் கண்டதும், அந்த ஆய்வுக்கூடத்தேயிருந்த அறிவுடைச் சான்றோர் ஒருவரின் பொறுமை எல்லை கடந்து போகின்றது. அவர்களின் வாயை அடைக்கும் வகையால், அவர் சொல்லிய செய்யுள் இதுவாகும். "அறிவாளர்களுள் இருவகையிர் உள்ளனர். ஒரு சாரார், அருமையுடைத்தான பொன்னைப் போன்றவர்கள். சுடச்சுட ஒளிறுகின்ற பொன்னைப்போலப் பிறர் கேள்வியால் மடக்குதற்கு முற்பட, முற்பட, இவர்களது அறிவின் ஒளியும் மிகுதியாக வெளிப்பட்டுப் பிரகாசிக்கும், இவர்கள் அறிவின் செழுமையினை யாரிடத்தே தோன்றியிருப்பக் கண்டபோதும், அதனைத் தாமும் பெற வேண்டுமென்ற ஆர்வத்துடனே, பொறுமையாகத் காத்திருப் பவர்கள். கரும்பினைத் தின்பவரின் முன்பாகத் தனக்கும் ஒன் றிரண்டு துண்டுகள் கிடைக்குமென்ற ஆர்வத்துடன் காத்திருக் கின்ற நாயினைப் போன்று, அறிவுப் பேச்சுக்களத்தின்கண்