பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

57


கலந்திருக்கும் ஆன்றோர்களும் ஏதாவது நல்ல பொருள் பொதிந்த கருத்துத் தமக்குக் கிடையாதா என்று ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். பொருளற்ற புன்மை யுரைகளை எல்லாம் அவர்கள் பாராட்டுவதே இல்லை.

ஆனால் உள்ளத்தே கருமை படர்ந்துள்ள புல்லறிவினர் களின் நிலைமையோ இதற்கு முற்றவும் வேறானது. அவர்கள் கேட்கும் எல்லாவற்றையுமே அப்படியே மெய்ம் மொழிகளாக ஏற்றுக்கொண்டு போய் விடுவார்கள் அல்லது எதனையும் கேட்டு அறிவதற்கில்லாமல் சோம்பலில் ஆழ்ந்து கிடப்பார்கள். அதுவும் இல்லையானால் தொடர்புள்ள செய்திகளை விட்டுத் தொடர்பற்ற செய்திகள் பலவற்றையும் எடுத்துக் கொண்ட விவாதத்திற்கு மாறுபட்ட பொருள்களையும் விரித்து விரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இதனைக் கேட்டதும், அறியாமையால் பதறிக் கொண்டிருந்தவரின் வாய் தானாகவே மூடிக் கொள்ளுகின்றது. விவாதமும் தொடர்கின்றது. -

அரும்பொனன் னார்கோட்டி யார்வுற்றக் கண்ணும் கரும்புதின் பார்முன்னர் நாய்போற் - கரும்புலவர் கொண்டொழிய வொன்றோ துயில்மடிப வல்லாக்கால் விண்டுரைப்பர் வேறா விருந்து. (புறத். 99) இந்தச் செய்யுள் புல்லறிவால் பெருமை பேசிக் செருக்குற்றுத் திரிபவர் அனைவருக்குமே சிறந்தவொரு அறிவுரை ஆகும்.

12. விரிச்சி வேண்டாம்

தகடூர் முற்றுகைக்கான வேளையும் நெருங்கிக் கொண்டிருக் கின்றது. சேரர் படையணிகள் தகடுர்க் கோட்டையைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டவாய்ப் பாடி தங்கிவிட்டன. அவ்வேளை யிலே தகடூர் நாட்டின் ஆநிரைகளைச் சென்று கவர்ந்து வருதல் வேண்டும் என்கின்ற ஆணையானது சேரனிடமிருந்து பிறக்கின்றது.

பகைப்படை வந்து தம்மை வளைத்துக் கொள்ளத் தொடங்கியதும், தகடுர் நாட்டினர் தங்கள் நிரைகளை எல்லாம் பாதுகாவலான இடத்திற்குக் கொண்டு சென்று அவற்றைப் பகைவர் கவர்ந்து கொண்டு போய்விடா வண்ணம், மிகவும் விழிப்பாகக் காவல் காத்தும் வருகின்றனர்.