பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

63


ஒன்று, படை மறவர்க்குப் பெருஞ்சோறிட்டும் தண்தேறல் வழங்கியும் மன்னன் அவரைச் சிறப்பித்தல் ஆகும்.

சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை தன்னை அழிக்கக் கருதிப் பெரும்படையுடனே வந்து, தன் நாட்டின் எல்லைப் புறத்தே பாசறையிட்டு, வெட்சிப் போரைத் தொடங்கியதும், தகடுர் அதிகமான் தன் நாட்டின் மானத்தைக் காத்து நிற்கின்ற பெருஞ்செயலிலே ஈடுபட வேண்டியவனா கின்றான்.

போர்முரசு முழங்கத் தொடர்ந்து வாள் நாட்கோள் குடை நாட்கோள் என்பன நிகழ்கின்றன. மறவர் கூட்டங்கள் வந்து கூடுகின்றனர். அவர்களை உரிய படையணிகளுள் அமைத்துப் படைவரிசைகளை ஒழுங்குபடுத்துவதும், தக்க பயிற்சிகளை அளிப்பதும், அடுத்து மிகவேகத்துடன் நடைபெறுகின்றன.

இவற்றையடுத்து, மன்னன் தன் மறவர்களுக்குப் பெருஞ்சோறிட்டுப் பாராட்டும் விழாவும் ஆரவாரத்துடனும் ஆடம்பரத்துடனும் நிகழ்கின்றது. அந்த விழாவின் கண் மன்னன், தானும் வந்து கலந்து கொள்கின்றான். அந்த விழாவினைக் கண்ட சான்றோர் ஒருவர், மறவரின் மாண்பினை வியந்து பாடுகின்றார். -

"அதிகமான் உண்டிகொள்வதில், தான் தன் படைகளுக்கு முந்தியவனாக உண்டானில்லை. அவர்களுடன் அமர்ந்தே தானும் உண்டான். -

'தண்ணிய கள்ளினை, நிறையத் தன் வீரர்களுக்குத் தானே வார்த்தும் வழங்கிப்போற்றினான். இங்ங்னம் அவன் தன் பெருநிலையினின்றும் தாழ்ந்து தன் படை மறவரோடு தானும் ஒருவனாகக் கலந்து கொண்டான்.

'அவனுடைய இந்தச் செயலுக்காகவோ, ஆற்றலுடைய மறவர்கள் பலரும் கூற்றுவனுக்குத் தம் உயிரை வழங்குவதற்கு இசைந்தார்கள்! - -

"இவர்கள் தம் மன்னர்க்கு உறவினராக இல்லாதவரிடம், சற்றும் ஒர்ந்து கண்ணோட்டம் கொள்ளாத தன்மையினராகவும் காணப்படுகின்றனரே!” -

போர்க்கண் பகைவரை அழித்தலொன்றே குறிக்கோளாகக் கொண்டு செருக்கி எழுந்த வீரரது பேராரவாரத்தைக் கண்ட புலவர், அந்த மறவரது நாட்டுப்பற்றையும், நாட்டுக்காக உயிரைத் தருவதற்கும் முன்வருகின்ற தியாகநிலையினையும் வியந்து போற்றுகின்றனர். - - -