பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

தகடூர் யாத்திரை


உண்டியின் முந்தான் உடனுண்டான் தண்தேறல் மண்டி வழங்கி வழிஇயதற்கோ - கொண்டி மறவர் மறலிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க் குறவிலர் கண்ணோடார் ஓர்ந்து (ഗ്ഗഴ്സ് 2്) “மன்னர்க்கு உறவிலர் எனின் அவர்பால் ஒர்ந்து கண்ணோடலைச் செய்யார்; மறலிக்கு உயிர்நேர்ந்தார், இக் கொண்டி மறவர்’ என உரைத்துப் போற்றுகின்ற புலவர் அதிகமானின் உள்ளச் செவ்வியையும் சிறப்பாக உரைத்து வியக்கின்றனர். - - 16. கடனாற்றிய புகழோன் தகடூர்ப் பெரும்போர் இருதிறத்து மறவர்களும் தமக்குள் பொருதுகின்ற ஒரு கடுமையான கட்டத்தையும் அடைந்து விடுகின்றது. சேரரின் முன்னணிப் படையினர் அணியணியாக வந்து தகடூர்க் கோட்டையை அணுகுவதற்கு முற்படுகின்றனர். தகடூர் மறவர்கள் பகைவரைக் கண்டதும் பயந்து கோட்டைக்குள் அடைத்துக் கிடக்கவில்லை. காவற்காட்டின் எல்லையை அடையும் முன்பாகவே சேரரின் படையணிகளுக்கு எதிராக வந்து தடைசெய்து நின்றனர் தகடூர் மறவர்கள். கடல்போலத்திரண்டுவருவது சேரரின் பெரும்படையானாலும், மானவுணர்வினால் செருக்குற்ற தகடூர் மறவர்கள் அதனைக் கண்டு அஞ்சிவிடவில்லை. தம் வலிமை தோன்றப் பகைவர்க ளிடையே புகுந்து, தம்மால் இயன்றவரை பகைவரை அழித்துக் களத்தில் விழுப்புண்பட்டு வீழ்தலையே உளங்கொண்டு உறுதியாகப் போரிட்டு வந்தனர். - 'இங்ங்னம் நிகழ்ந்த போரின் கடுமையான போக்கினால், தகடூர் நாட்டுத் தலைநகரை அடைவதற்கு முன் ஒவ்வொரு காலடியளவான இடத்தைக் கைப்பற்றக் கூடச் சேரர்கள் தம் படைமறவர்கள் பலரைப் பலிதர வேண்டியிருந்தது. வீரத்திருமகனாக விளங்கிய ஒரு மறவன், தகடுர்ப் படையணியைச் சேர்ந்தவன், பகைவரிடையே புகுந்து வாளாற்றல் காட்டிக் கணக்கற்றோரை வெட்டி வீழ்த்தித் திரிந் தான். அவன் வரவைக் கண்டதும் சேரர் அணிகள் கலகலத்தன. அவனுடைய வாளாண்மை பகைவரையும் திடுக்கிட்டு அஞ்சித் தளரச் செய்தது. முடிவில் அவனைப் பலராகக் கூடி வளைத்துக் கொண்டு அவன்பால் தம் ஆயுதங்களை எறிகின்றனர். அவனும் களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்தான். -