பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ii

குறிப்புகளுக்கும் ஒற்றுமை பல காணப்படும்” என்று அறிஞர் வையாபுரிப்பிள்ளையவர்கள் ஆராய்ச்சி முடிவாகக் கூறியுள்ளார்.

தகடூர் யாத்திரை என்பது தகடூர் மாலை என்ற பெயரிலேயே வழங்கியுள்ளது அறியப் பெறுகின்றது. புறப்பொருள் வெண்பாமாலை, வீர வெட்சிமாலை, உழிஞைமாலை, தானை மாலை, நொச்சி மாலை, தும்பை மாலை, காஞ்சி மாலை, வாகை மாலை, வென்றிமாலை முதலியவற்றைப்போல், தகடூர் மாலை என்பதும் போரைப் பற்றிப் பாடிய நூலாகவே விளங்கி வந்தது என்பது தெளிவாகிறது.

தகடூர் யாத்திரை - தகடூரின் மீது பெருஞ் சேரல் இரும்பொறை போர்தொடுத்துத் தகடூரை அழித்த வரலாற்றைக் கூறுவது. அப்பொழுது தகடூரை ஆண்டு கொண்டிருந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியேயாவான். இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறையே - முரசு கட்டிலில் உறங்கிய புலவரை வாள்கொண்டு வெட்டி வீழ்த்தாமல் கவரி கொண்டு வீசினவன் என்பது பெரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

இந்தத் தகடூர் யாத்திரை 48 பாடல்களைக் கொண்டது. புறத்திரட்டில் கிடைத்துள்ளது. பதிற்றுப்பத்தில் கிடைத்துள்ளது. பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தும், தகடூர் யாத்திரையில் அரிசில் கிழாரும் பொன்முடியாரும் பாடிய பாடல்களே சான்றாக விளங்குகின்றன. இதனை மிகச் சிறந்த முறையில் தெளிவாகவும் - விளக்கமாகவும் - இனிய - எளிய நடையில் புலியூர்க் கேசிகன் வழங்கியுள்ளார். இந்நூலை வெளியிட்டு எங்களது பதிப்பகம் பெருமை அடைகிறது. நீங்கள். வாங்கிப் படித்துப் பயனடைவீர் என்று வேண்டுகின்றோம்.

பதிப்பகத்தார்