பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

65


அன்றையப் போரின் முடிவில், அவனைத் தூக்கிக் கொணர்ந்து, அவன் புண்கட்குத் தகடுர்க் கோட்டையுள் மருந்திட்டு நலப்படுத்த முயல்கின்றனர். ஊரெல்லாம் அவனது வீர விளையாட்டையே பேசிக் களிக்கிறது. அவனை வந்து கண்டார் தமிழ்ச் சான்றோர் ஒருவர். அவர் கண்கள் வற்றாத கண்ணிர்க் குளமாகின்றன. அவனுடைய உடலினை உற்று நோக்கிய அவர், அவன்ை வியந்துவியந்து தம்மை மறக்க, அங்கே தமிழ் வீரச் செறிவுடன் வெளிவந்து ஒரு பாடலாகின்றது.

குழிபல வாயினும் சால்பா னாதே முழைபடு முதுமரம் போலெவ் வாயும் அடைநுழைந் தறுத்த விடனுடை விழுப்புண் நெய்யிடை நிற்றல் ஆனாது பையென மெழுகுசெய் பாவையிற் கிழிபல கொண்டு முழுவதும் பொதியல் வேண்டும் பழிதீர் கொடைக்கடன் ஆற்றிய வேந்தர்க்குப் - படைக்கடன் ஆற்றிய புகழோன் புண்ணே. (புறத் 274) ‘இவன் உடலிடத்தே காணப்படுகின்ற குழிகள் பலவாயினும், அவை அவனுக்குச் சிறப்பையே தருவன வாகின்றன. ப்ொந்துபட்ட முதிய மரத்தைப் போல, எவ்விடத்தும் முற்றவும் நுழைந்து கிழித்த இடங்களை உடையவாக விழுப்புண்கள் தோன்றுகின்றன. " .

'புண்ணுக்கு நெய்யிட்டு மருத்துவஞ் செய்தால், நெய்யும்

அவ்விடத்து நிற்றற்கு இயலாதாக வழிந்து போகின்றது.

மெல்லென மெழுகினாற் செய்தமைக்கும் பாவையைப் போலத் துணிகள் பலவற்றைக் கொண்டு அவன் உடலினை முற்றவுமே பொதிந்து வைத்தல்தான் செய்தல் வேண்டும். -

"பழியினின்றும் நீங்கியவரும் கொடைக்கடனைச் செவ்விதே ஆற்றியவருமான தம்முடைய வேந்தருக்குப் படைக் கடன் ஆற்றிய புகழினை உடையோன் அவன். அவனுடலின்கண் தோன்றும் விழுப்புண்களின் மிகுதியை, எங்ங்னம் கூறி அவன் படையாண்மையைப் போற்றுவது - - இங்ங்னம் வியக்கின்றார் தமிழ்ச்சான்றோர். அந்த வியப்பினாலே, ஓர் அரிய மறமாண்பினனான மாவீரன் ஒருவனது புகழமைந்த போர்க்களச் செயலது மேம்பாட்டையும் நமக்குக் காட்டுகின்றார். -