66
தகடூர் யாத்திரை
-- 17. கைபார்த் திருப்பன்! தகடூர் மறவன் ஒருவனின் தறுகண்மையினை மேலே கண்டோம். சேரரது படைமறவன் ஒருவன் தன்னுடைய படைத் தலைவனின் மெய்க் காப்பளனாகச் சென்று, களப்போரிற் கலந்து கொள்ளுகின்றான். அவனைப்பற்றி இங்கே காண்பாம். தலைவன் மதஞ் சொரியும் களிற்றின்மீது அமர்ந்தவனாகப் படையினை நடத்திச் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது, தகடூர் மறவர்கள் சிலர் குதிரைகளைச் செலுத்திக் கொண்டு சேரப் படையணிகளைப் பிளந்து ஊடுருவியவராகக் கூற்றுவனின் தூதர்களைப் போலக் கடுவேகத்துடன் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுள் ஒருவன் எறிந்த வேல் ஒன்று அந்தப் படையணித் தலைவனின் உயிரைக் குடித்துவிடுகின்றது. அதனைக் கண்ட வீரன் சினங்கொள்ளுகின்றான். “அந்த வேலுக்கு உரியவனைக் கொன்று, அவன் கைவேலை வெற்றிச் சின்னமாகக் கொண்டு வருவேன். அங்ங்னம் கொண்டு வராவிட்டால், பொழுது விடிகின்ற நேரத்திற் சென்று, எவ்வை கடிபட்டுக் கிடக்கும் இல்லகத்தே சென்று, என் கையினைப் பார்த்தபடியே கோழைபோல் முடங்கிக் கிடப்பேன்’ என்கின்றான். - - - செவ்விக் கடாக்களிற்றின் செம்மற் றகத்தெறிந்த கெளவை நெடுவேல் கொணரேனேல் - எவ்வை கடிபட்ட வில்லகத்து கைபார்த் திருப்பன் விடிவளவிற் சென்று விரைந்து. (புறத் 130) 'செவ்விய பேராற்றலையுடையதும் மதம் பொழிவதுமான களிற்றினது, செவ்விய மத்தகத்திடத்தே எறிந்த ஆரவாரத்தை யுடைய நெடிதான வேலினை, மீளவும் சென்று பற்றிக் கொணராது போவேனேல், எவ்வை கடிபட்ட இல்லகத்து, விடிவளவில் விரைந்துசென்று,கைபார்த்துஇருப்பேன்’ என்பது பொருளாகும். . - எவ்வை கடிபட்ட இல் என்றது பேய்வந்து விழுப்புண் பட்டானை வருத்தாது வேம்பும் வெண்சிறு கடுகும் தூவிக் காவற்குட்பட்டதாக விளங்கும் வீடு, அங்குச் சென்று விடிவளவிற் கைபார்த்திருப்பேன்’ என்றதனால், அம் முயற்சியில் அழிவெய்திப் புண்பட்டுக் கிடந்து சாவை எதிர்நோக்கி இருப்பேன் என்று வஞ்சினம் கூறியதாகக் கொள்க. - 'தன் கைவேலினைப் பகைவரது களிற்றின் மத்தகத் தெறிந்து களித்த தகடூர் மறவன் ஒருவன், அதனைக் கொன்று போக்கிய