புலியூர்க் கேசிகன்
67
தன் நெடுவேலினை மீட்டுவருவதாக ஆண்மை கூறியது இது வெனவும் உரைக்கலாம். - -
எங்ங்னமாயினும், பழந் தமிழரது, போர் மற மாண்பு. இதனாற் புலப்படுதலைக் கண்டு நாம் திளைத்தல் வேண்டும். மறமாண்புடன் நாட்டைக் காக்க முன்வருதல் நம் கடமைஎன்னும் உணர்வு நம்மிடையே நிலைபெறுதற்கு இச் செய்யுளைப் பன்முறை கற்றுப் பாராயணம் செய்தல் வேண்டும்.
18. இரப்போனுக்குக் கரப்போன்
சேரரது முன்னணிப் படை, யானைத் திரள்களுடன் கூடியதாகத் தகடுர் நகரை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது. ஊரின் எல்லைக்கண், அதனைச் சென்று தன்னந்தனியானான ஒரு தகடூர் மறவர் தலைவன் தடுத்து நிற்கின்றான்.
அவனது தறுகண்மையைக் கண்டு சேரர் படையினர்
வியப்புடன் திகைத்து நின்றாலும், அவனது அழிவை நினைந்து, அவனுக்கு அறிவுரை கூறி விலகிச் செல்லுமாறு செய்தற்கும் நினைக்கின்றனர். - -
ஒரு வீரன் சொல்லுகின்றான்:
"கூற்றையொப்ப சினந்து வருகின்ற எம்முடைய களிற்றுப் படையினை எதிர்க்கத் துணிந்து முன்நிற்கும் அறியாமை யாளனே வீணின் அழிதல் வேண்டா ஒடிப் போய்விடு"என்று.
அதனைக் கேட்டதும், அங்ங்ணம் தடுத்து நின்ற தலைவனின் சொற்களிலே நெருப்பெழுகின்றது. அவன் தோள்கள் பூரிப்புடன் நிமிர்கின்றன. அவன் கூறுகின்றான்:
“விரைய வரும் களிற்றின் மேலோனே! நாகத்தைப் போல நன்றாக நெடிதாகத் தொங்கும் பெரிதான துதிக்கையினை யுடைய, காய்கின்ற சினத்தையுடைய கலிமானோயே!
"வெள்ளம்போலப் பெருகிவரும் தானையினையுடைய நும் வேந்தனைப் போல, அதோ வருபவன் தோற்றுகின்றான். அவன் கண்முன்பாகவே உங்கள் படையணிகளின் உள்ளே புகுந்து அழித்து, உங்கள் நடுவிற் புகுவேன் யான். அங்ங்ணம் புகாது போயினே னாயின், தன்னை வந்து இரப்போனது இல்லாமை நிலையைக் கண்ட பின்னரும், அவனுக்கு யாதும் கொடாது தன்பாலுள்ள செல்வத்தை ஒளித்து வாழ்பவனின் சிறுமையைப் போன்ற பழியினை யானும் அடைவேனாக” என்கின்றான்.