பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

தகடூர் யாத்திரை


கலிமா னோயே! கலிமா னோயே! நாகத் தன்ன நன்னெடுந் தடக்கைக் காய்சின யானைக் கலிமா னோயே! வெள்ளத் தானைநும் வேந்தொப் பான்முன் உள்ளழித்துப் புகேஎ னாயின் உள்ளது இரப்போன் இன்மை கண்டும் கரப்போன் சிறுமை யானுறு கவ்வே! )1/21 للكات / ث. تي இந்த மாவீரன் தானுரைத்த வஞ்சினத்திற்கு ஏற்பவே படையணிகளிற் புகுந்து ஊடறுத்துச் சென்று பேரழி வினைச் செய்தனன் என்றும், அந்தப்போரிலே தானும் வீழ்ந்துபட்டனன் என்றும் நாம் கருதலாம். இவ்வாறு, தன்னாண்மை சிறந்த தறுகண்மையாளர் வாழ்ந்து சிறந்த தமிழினத்தைச் சார்ந்தவர் நாம் என்று நினைக்க, நம்மிடமும் இத்தகைய மறமாண்பு கால் கொள்ளும் அல்லவோ! 19. போரில் முனைக! தகடூர்ப் போர் உச்சக் கட்டத்தை அடைந்து விடுகின்றது. தகடூர் நகரைச் சுற்றிலும் சேரர்களது பெரும்படை பாசறை யிட்டுத் நகரை முற்றியிருக்கின்றது. அதிகமானோ, தன் நண்பர் களான சோழர்களது படைத்துணையை எதிர்பார்த்தவனாகக் கோட்டைக்குள் அடைத்திருக்கின்றான். சோழர் படை வருமானால், சேரர் படையின் பின்னணியில் அதுவும், கோட்டைக் குள்ளிருந்து வெளியேறித் தானும் இருபக்கமாக நெருங்கிப் போரிடலாம் எனவும், அங்ங்னம் வாய்ப்பின் சேரர்கள் அழிவர் எனவும் அதிக்மான் கருதியிருந்தான். இந்த நிலையினால், போரிடத்தே ஒரு செயலும் அற்ற அமைதிநிலை சில நாட்களாக நிலவியது அதிகனின் இந்த நிலையினைக் கருதியபோது, அது ஒருவகையில் அவனுடைய வெற்றிக்கு உதவுமாயினும் அதன் அடிப்படை தமிழ் மரபிற்குப் பொருந்தாததாகும் என்பதனைச் சான்றோர்கள் உணர்கின்றனர். - அதிகமானிடம் சென்று, அவனிடம், போர்நிலைபற்றி உசாவுகின்றபோது, அவன், தான் கோட்டையை விட்டு வெளியேறிச் சேரர்களைத் தாக்கியழித்தற்கான தக்க சமயத்தை எதிர்நோக்கி இருப்பதாகக் கூறுகின்றான். -