பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

தகடூர் யாத்திரை


மாலை வேளையில், தன் பகுதிக் காவலை ஏற்கவந்த சிலர்பால் ஒப்பித்துவிட்டு, அவன் சோர்வுடன் வீடு திரும்புகின்றான். அவனோடு களப்போரிற் கலந்துகொண்டு. திரும்புவாரான சிலரும் வந்துகொண்டிருக்கின்றனர். “நம்முடைய மறவருள் ஒருவன் இன்று சேரருள் இருபது மறவர்களை வெட்டிவீழ்த்தி நின்று முழக்கமிட்டான். யானைகள் இரண்டும் குதிரைகள் பல்வும் அவன் வாளுக்கு இரையாயின. அவன் தோற்றத்தைக் கண்டதும் பகைப்படை மறவர்கள் கலங்கி ஒடத்தொடங்கினர். முடிவில் வெட்டுண்டு வீரசுவர்க்கத்தைத் தழுவினான். அவனைப் போலப் போரிடுவோமாயின், நம் தாயகத்தை எவர் தாம் கவர முடியும்?” என்று, தானறிந்த நிகழ்ச்சியை ஒரு வீரன் செருக்குடன் கூறிவருகின்றான். . . "மேலைமுனைப் பாதுகாவல் தலைவன் இன்று ஆற்றிய பெரும்போரை நினைந்தாலும் நம் நெஞ்சம் விம்முகின்றது. காலனைப் போலப் படையணிகளுட் புகுந்து கொன்று குவித்து வீரவிளையாட்டு விளையாடி நின்றான் அவன்! அவன் போராண்மை கண்டு திகைத்து நில்லாதார் தாம் யார்? அவன்தான் அதோ விழுப்புண் பட்டவனாகப் பிறர் தன்னைச் சுமந்து செல்ல, அதோ போய்க் கொண்டிருக்கின்றான்” என்று, புண்பட்டு வரும் மாவீரனைக் காட்டி ஒருவன் கூறுகின்றான். இப்படிப் பலரும் சொல்லிவந்த களத்து நிகழ்ச்சிகளை கேட்க கேட்க, வீரரின் உள்ளம் வெறிகொண்டு விடுகின்றது. இரவு முழுவதும், உறக்கம் கொள்ளாதவனாகக் கிடந்து, அன்றையப் போரில் தான் கலந்து கொள்ளும் வாய்ப்பற்றுப் போனதை நினைந்து, கவலை கொண்டிருக்கின்றான் அவன். தம் நாட்டின்மீது பகைவர்கள் படை கொண்டுவந்து முற்றியிருந்த கொடுமையினால் வேதனையுற்றிருந்த அவன் தாயும், பிற தாய்மார்களும் திண்ணையில் அமர்ந்தவராக, அன்றையப் போரைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அப்பொழுது ஒருத்தி, நின் மகன் இன்னும் உறங்க வில்லையோ?” என்று கேட்கத், தாய் தன் மகனின் நிலையைக் கூறுகின்றாள். . வேற்றான் வந்து சூழ்ந்துள்ள போர்க்களத்திலே, ஒருவர் தம்மை எதிர்த்து நிற்கும் மற்றொரு சாராருக்கு எதிராகப் போர் மேற்கொண்டு சென்றனராயின், ஒன்று அவரை வீழ்த்தி வெற்றி கொள்ளல் வேண்டும்; அல்லது களத்தில் தாமாவது பட்டு வீழ்தல் வேண்டும்.' • . .