உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

73


'இவை இரண்டும் நேராதவனாக, இவன் களத்தினின்று திரும்பி வந்துள்ளான். அந்தக் கவலையினால் மனம் நொந்தும் கிடக்கின்றான். அவன் துங்குதலும் செய்வானோ? என்கின்றாள். - - .

தம் மகனின் போர்மறத்தினும், கடமையுணர்விலும் அந்தத் தாய்க்கு அவ்வளவு நம்பிக்கை அவ்வளவு பெருமிதம் நாட்டைக் காப்பதில் அந்த இளைஞனுக்கு அவ்வளவு ஆர்வம்! *.

நகையுள்ளும் நல்லவை எய்தார் பகைநலிய

வேற்றுக் களத்தில் ஒருவர்தம் மாறாகச்

சென்றால், ஒருவர் மேற் - புண்ணும் படுக்கலார், தான் படார், போந்தாரகக் கண்ணும் படுங்கொல் கவன்று (புறத் ேே)

காலையில், அன்றைப் போருக்கு அணிகொண்டு திரண்ட படைமறவர்களுள் ஒருவன், இரவெல்லாம் உறக்கமற்றவனாகி வந்து கொண்டிருந்த ஒருவனைக் கண்டு, அவனுடைய மறமாண்பினை வியந்து கூறுவதாகவும் இதனைக் கொள்ளலாம்.

22. அறியுநர் என்னும் செருக்கு

வேந்தரால் தாம் அறிந்து பாராட்டப் பெற்றவர் என்னும்போது, அந்தப் பெருமித நிலையால், படைமறவர் செருக்குடன் பேராண்மையில் ஈடுபடத் தொடங்குவர். களத்தில் பகைவரோடு போரிட்டு வீழ்ந்தாலும், அந்தப் பாராட்டு அவர்கட்குரிய பெறற்கரிய பேறாகக் கொள்ளப்பட்டு, அவர்களின் குலத்தவரால் மதிக்கப்படும். இப்படிப்பட்ட செருக்குடையவராவதனையே மறவர்கள் அனைவரும் விரும்புவர். அன்றி, உயிரைப் பேணியவராக ஒடிஒளிதலை எவருமே கருதமாட்டார்கள். - . -

சேரரின் முன்னணிப் படையினை எதிர்நின்று தடுத்துத், தமியனாக நின்று போரிட்டு, அந்தப் போரில் வீழ்ந்தும் போயினான் ஒரு மறவன். அவனுடைய மறச் செயலை அறிந்து வியந்த மன்னன், அவனுடைய பெயரினைப் போற்றி உரைத்துப்

பூரிக்கின்றான். அந்தப்பூரிப்பினை அறிந்த மறவர்கள் ஆரவாரிக் -

கின்றனர். அவர்களுள் ஒருவன், தானும் அத்தகைய புகழ்ச் செயலை ஆற்றப் போவதாகக் கூறவே அவன் அருகிலிருந்த ஒருவன், அந்தச் செயலினது அருமையினை விளக்குவான் போல, இப்படிக் கூறுகின்றான்.

« .