பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

தகடூர் யாத்திரை


“வேற்றாரின் வேற்படை வீரர்கள் வெள்ளம்போல் அணுகி வருகின்றனர். அப்பொழுது, ஆற்றின் கண் வருகின்ற கடுமையான வேகத்தையுடைய புதுப்புனலைத் தடுத்து நிற்கின்ற கல்லணையைப் போல, அவ் வீர மறவன் தானே தனியனாகத் தடுத்து நின்றான். எதிர்வரும் பெரும்படைக்கு எதிரே தான் ஒருவன் தடுத்து நிற்பதனால், தான் அழிவது உறுதி என்பது கருதி அவன் நடுங்கினானும் அல்லன். தளர்ந்து பின் நோக்கினானும் அல்லன். அசையாது நின்று, அணுகியவரை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தான்.”

அவனைப் போலத் தூசிப்படையைத் தாங்கி நிற்கும் துணிவுடையார்க்கு அல்லாமல், பிறருக்கு, அழகுமிகுந்த இளந் துளிர் மாலையினையும் முழவனைய தோள்களையும் உடைய மன்னரால் அறியப்பட்டார் என்னும் செருக்கினைப் பெறுதல் எளிதாமோ?

அஃது எளிதன்று என்று கூறி, அந்த வீரனின் தறு கண்மையினைப் போற்றுகின்றனர் மறவர்கள்.

வேற்றானை வெள்ளம் நெரிதர யாற்றுக் கடும்புனற் கற்சிறை போல நடுங்காது நிற்பவற் கல்லால் எளியவோ - பொற்பார் முறியிலைக் கண்ணி முழவுத்தோள் மன்னர் அறியுநர் என்னுஞ் செருக்கு.

மன்னர் அறியுநர் என்னும் செருக்கு எளியவோ?’ என உரைத்து, அதனைத் தாமும் அடைவதனை விரும்பி நிற்கும் மறமாண்பினைச் செய்யுள் நன்றாக நமக்குக் காட்டுகின்றது?

23. மூத்தார் இளையவர்

சிலர் உடலளவில் மூத்தாராகி விளங்குகின்றனர். சிலர் அறிவினாலும் பண்பாலும் மூத்தாராகிச் சிறப்புப் பெறுகின்றனர். உடல் முதுமையானாலும் அறிவில் இளையராயிருப்போரும் உளர்; உடலின் இளமையாயினும், அறிவில் முதியராக விளங்குவோரும் சிலர்.

போர்மறத்தைப் பொறுத்தவகையிலும் இந்த முதுமை என்பதும் இளமை என்பதும் காணப்படும்.

தாம் பிறந்துள்ள அந்த மிக்க சிறுபருவத்தேயும், பெய்யப் பெற்ற மலர்களையுடைய குளிர்ந்த மாலையினை அணிந்த தம் மன்னவர்கட்குத் தம் உடம்பினைப் பரிசிலாகக் களத்தே