பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

தகடூர் யாத்திரை


படையணியுள் ஆற்றல் மிகுந்தவனாகிய ஒரு மறவனை அழைத்து, அவனுக்கு ஒரு பணியினையும் விதிக்கின்றான்.

‘வீரனே! சேரரோ மிகவும் படைபலத்துடன் வந்து பாடியிட்டிருக்கின்றனர். யான் கூறும் செயலோ மிகவும் இடர்ப்பாடானது. அவர்களது படையணிகளுள் ஆற்றல் மிகுந்தானாக விளங்கி, நம் பகுதிப் படைகளைப் பேரழிவுக்கு உட்படுத்தினான் கொடியவன் ஒருவன்; அவனைக் கொல்லுவது குறித்தே நின்னை ஏவுகின்றேன். அவனுடன், அவன் படையினையும் நீ சென்று அழித்து வருதல் வேண்டும்.

"இந்தச் செயலை இரவுப் பொழுதில் அவர்கள் பாடியிட்டு உறங்கியிருக்கும் வேளையிலே சென்று செய்தல் சிறந்தது. அயர்ந்த உறக்கத்தே ஆழ்ந்திருக்கும் அவர்களிடையே, காவலர் அறியாதபடி கரவாக மறைந்து சென்று, அந்தக் கொடியானை யும் அவன் படைமறவரையும் கொன்றுவிடல் வேண்டும். இதனைச் செய்யத் தகுதி உடையவர் நின்னையன்றிப் பிறர் எவருமில்லை. ஆகவே, இதனை நம்முடைய நலத்தைக் கருதித் தகுந்த துணைவருடன் சென்று நிறைவேற்றி வருவாயாக" என்கின்றான். . -

வேந்தனின் ஆணையைக் கேட்டதும் வீறுகொண்டு எழவேண்டிய அந்த வீர மறவன், அங்ங்னம் எழாதது மட்டுமன்று, தன் வேந்தன்பாற் சீற்றமும் கொள்ளுகின்றான்.

படைமுகத்து எதிரியை எதிர்நின்று போரிட்டு வெல்வதோ, அன்றி அச்செயலுள் வீழ்வதோ ஆண்மையாகுமே அல்லாமல், கோழை போலப் பதுங்கிச் சென்று, அவர் உறங்கும் காலத்தே கொல்வது ஆண்மைச் செயலாக ஆகமாட்டாது.

ஆண்மையாளனாகிய தன்னை, இரவிற் செல்க' என்று கூறியது, தன்னுடைய ஆண்மையினைப் பழித்ததாகும் என்றே சீறுகின்றான் அவன்.

'கடல்போன்ற வேல் வீரர்களையுடைய பகைப்படை யினரைப் பகலிற்சென்று பொருதுக' என்று கூறின் யான் அஞ்சி நிற்கும் தகையனோ? அல்லவே! அங்ங்னமாகிய என்னை நோக்கி, இரவோடிரவாகச் சென்று அழித்து வருக என்று ஏவுகின்றனை மிக விரைந்து சென்று செய்க எனவும் ஆணையிடுகின்றனை!

"நீ என் வேந்தன் ஆயினாய். அதனால், என்பால் இத்தகைய இழிசெயலைச் செய்யக் கூறிய நின்னைப் பொறுத்தேன்.