உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

77


அன்றிப் பிறர் யாவராயினும் இங்ங்னம் என்பாற் போந்து . என்னை நோக்கிக் கூறியிருப்பின், அங்ங்னம் சொன்ன அவ ருடைய நாவானது, மீண்டும் அவர் வாயுட் புகுந்திருக்குமோ? அதனை வெட்டி வீழ்த்தியிருப்பேனே' என்கின்றான்.அவன்.

பரவைவேற் றானைப் பகலஞ்சு வேனா இரவே எறியென்றாய் என்னை - விரைவிரைந்து வேந்தன்நீ யாயினாய் அன்றிப் புகுவதோ

போந்தென்னைச் சொல்லிய நா! (புறத் 319)

பகைவரை அழித்தல்தான் படை மறவரது நோக்கமாயினும், அவ்விடத்தும், வஞ்சித்து அவரைக் கொன்றொழிக்க நினையாத பேராண்மை கொண்ட மறவனை, நாம் இந்தச் செய்யுளிற் காண்கின்றோம். தமிழரது மறமாண்பு, அதிலும் தகடுர்நாட்டு மறவரது செவ்விய மறமாண்பு, நம்மைச் சிந்தை சிலிர்க்கச் செய்வதாக விளங்குகின்றது. -

25. நாணுத் தரும்! “சேர நாட்டாரின் களிற்றுப்படை நம் நகரை நோக்கி விரைய வந்து கொண்டிருக்கின்றது. அதன் வரவினைத் தடுத்து நிறுத்தத் துணிவுடையார் விரைந்து செல்க'வென்று தகடூர்ப் படைத் தளபதிகளுள் ஒருவன், தன் தலைமையிலிருந்த படைமறவருக்கு ஆணையிடுகின்றான்.

அந்த ஆணை பிறந்ததும் படையினரிடையே ஆரவார ஒலி எழுகின்றது. அவர்களுள் களிற்றுப்படைப் போர்க்குப் போவாராக ஒவ்வொரு வரும் முந்துகின்றனர். இன்று நம் வீரத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பு’ என்று பெருமிதங் கொண்டு, தத்தம் குதிரையேறிச் செல்வதற்குப் புறப்படுகின்றனர்.

இங்ங்னம் திரண்டு சென்ற தகடூர் மறவர்களின் கூட்டம், கானத்துக் கடும்புலிகளைப் போலச் சென்று, வருகின்ற சேரரது களிற்றுப் படையணிகளுள் ஊடறுத்துப் புகுந்து அதனைக் கலக்குகின்றது. புகுந்தவர் சிறு கூட்டத்தவரே எனினும், அவர்களது போர் வெறியின் கடுமையாற் சேரப்படையணி சிதைகின்றது. வெட்டுண்டு வீழ்ந்தோரும், புண்பட்டுக் கிடப்போருமாகக் களத்தே ஒரே பேரொலி எழுகின்றது. ‘வெட்டுகவெட்டுக எனவும், குத்துககுத்துக எனவும் கொல்லுக கொல்லுக எனவும் ஒலிகள் நாற்புறமிருந்தும் எழுகின்றன.

இவ்வாறு நிகழ்ந்த போருள், தகடூர் மறவன் ஒருவன் பெரிதும் வெற்றி விளைத்துக் காலனைப் போலக் கடும்பரி