பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தகடூர் யாத்திரை


செலுத்தி வெற்றியுலா வந்து கொண்டிருக்கின்றான். களிற்றின் மேல் வீற்றிருந்து போராடும் வீரர்களை வெட்டி வீழ்த்திக் கொக்கரிக்கும் அவன், களிறுகளைமட்டும் வெட்டாது விட்டுவிட்டுச் செல்லுகின்றான். -

அன்றைய தாக்குதலின் ஒரு நிலை ஒருவாறாக முடிவுறுகின்றது. சேரரின் களிற்றுப் படையணி முன்னேறுவது நின்றது. தம்முடைய இழப்புக்களைச் சரி செய்து கொள்வதிலே சேரர் படைத்தலைவர்கள் ஈடுபடுகின்றனர்.

தகடூர் மறவரும் அன்று பெற்ற வெற்றியுடன் முழங்கியவராகத் தம் நகருக்குள் திரும்புகின்றனர். அங்ங்னம் திரும்புகின்றவர்கள், அன்றையப் போர் நிகழ்ச்சிகள் பலவற்றையும் பற்றி உரையாடியபடியே வருகிறார்கள். வரும் அவர்களுடைய வரவை எதிர்பார்த்துத் தகடுர் மக்கள் வெற்றிக் களிப்புடன் காத்திருக்கின்றனர். -

இந்த நிலையிலே, யானை வீரர்களைக் கொன்று, யானைகளை வெட்டாது விட்டுவிட்டு வந்த மறவனை நோக்கி, ஒருவன்,'தலைவனேயானை வீரர்களை வெட்டிமாய்த்ததுடன், யானைகளையும் வெட்டி வீழ்த்தல் வேண்டுமன்றோ! அவைகளை வெட்டாது விட்டு வருவதனால், மீளவும் அவை சேரர்க்குப் பயன் படலும் கூடுமல்லவோ?’ என்கின்றான்.

'நாம் கைப்பற்றிக் கொணர்ந்த சில யானைகளைக் கண்டிருப்பாய் அல்லவோ அவை நமக்குப் பயன்பட மாட்டாவோ?’ என்கின்றான் தலைவன். -

'எனினும், வெட்டிச் சாய்ப்பதுதான் நன்று’ என்று கூறுகின்றான் அவ் வீரன். . -

'நண்பா வானையே வளைத்து வைத்திருப்பது போன்ற வலிமையினைக் கொண்ட நெடிய பெருங்கையினை உடைய ய்ானைக்கு, என் கையிலுள்ள இந்த வேற்படை உரித்தாக வேண்டும் என்பாய் நீ -

“அதனை வெட்டி வீழ்த்துதல் எனக்கும் எளிதாகவே இருந்திருக்கலாம். ஆனால், ஒன்றை மறந்து விட்டனை போலும்! எத்துணை வலியுடைதாயினும், அந்த யானை தானும் ஒரு விலங்காகும் அல்லவோ? அஃதன்றியும் ஒற்றைக் கையினை மட்டும் உடையது அல்லவோ? ஆகவே, அதனை வெட்டி வீழ்த்துதல் நன்று என்கின்ற ஒரு நன்மைப்பாட்டை யான் அறியமாட்டேன். அது என் வீரத்திற்கு நாணுத் தருகின்ற பழியுடைய செயலேயாகும்” என்கின்றான் அவன்.