பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

79


வான்வணக்கி யன்ன வலிதரு நீள்தடக்கை யானைக்கீ தென்கையில் எஃகமால் - தானும் - விலங்கால் ஒருகைத்தால் வெல்கைநன் றென்னும் நலங்காணேன் நாணுத் தரும். (புறத் :1320) "யானை விலங்காதலினாலும், ஒரு கையினை மட்டுமே உடையதாதலினாலும், அதனை வெற்றி கொண்டு வெட்டிமாய்ப்பது தன் மறமாண்பிற்கு நானுத் தருவதாகும்" என்று உரைக்கின்றான் அந்தத் தலைவன்.

அவனுடைய மறமாண்பின் பெருமித நிலையினை நாம் இதனால் அறிகின்றோம். களப்போரின் இடையிலுங்கூட, இங்ங்னம் பண்புகொண்டு போரிடுவது, தமிழ் மறவரின் தறுகண்மையாக இருந்தது. இதனை அறியும்போது, அந்த மறவர் தலைவனை நாமும் நினைந்து போற்றி நெஞ்சிற் கொள்ளுகின்றோம். - -

26. சான்றோர் மகன்!

சேரநாட்டுப் படை மறவர்களுக்கும் தகடூர் நாட்டுப் படை மறவர்களுக்கும் இடையே, நேரடியான கைகலப்பு ஏற்பட்டு விடுகின்றது. கொல்லும் புலிக் கூட்டங்கள் தம்முள் ஒன்றுடன் ஒன்று சினந்து மோதிக் கொள்வதைப் போல, இருதிறத்து மறவர்களும் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்தக் கடும்போரின் இடையேயும், ஒரு மறவன்

தன்னுடைய குதிரைமீது அமர்ந்தவனாகச் சுற்றிச் சுழன்று திரிந்து கொண்டிருக்கின்றான். தன்னை எதிர்த்தாரை வெட்டி வீழ்த்திச் செருக்குடன் முன்னேறிச் செல்லும் அவன், தன்னைக் கண்டு ஒதுங்கிப்போகும் சேரர்படை மறவருக்கு யாதும் ஊறு விளைவிக்காது, எவரையோ தேடுவானைப் போலச் சென்றுகொண்டே இருக்கின்றான். முடிவில் அவன் எதிர்பார்த்ததும் வந்து கைகூடிற்று. சேரரது படையணிகளுள் அன்றையப் போர்க்குத் தலைமைவகித்து நடத்திவரும் தலைவனை நாடித்தான் அவன் சென்றிருக்கின்றான். அவனைக் கண்டதும் சிங்கக் குருளைபோலப் பாய்ந்து, அவனை வெட்டி வீழ்த்தி, வீரமுழக்கம் இடுகின்றான். அவனுடைய வெற்றியைத்

தகடூர்ப் படை ஆரவாரித்துப் போற்றுகின்றது. தலைவனை இழந்துபோன சேரர்படை சிதறுண்டு பின் வாங்குகின்றது.

வெற்றி முழக்கத்துடன் தகடுர் மறவர்கள் தம் உள்ர் திரும்புகின்றனர். அந்த மாவீரன் பலரும் சூழ்ந்து தன்னைப்

போற்றத் தருக்குடன் பவனி வருகின்றான். அவனுடைய

செயலை வியந்து சான்றோர் பாடுகின்றனர். -