புலியூர்க் கேசிகன்
83
கருங்குரல் நொச்சி மிலைந்த
திருந்துவேல் விடலை காப்பமைத் தனனே!(புறத் 4ே)
எயில்காத்தற் போரிடையே, விழுப்புண் பட்டான் ஒருவனைக்குறித்துச் சான்றோர் செய்த செய்யுள் இதுவெனவும் கூறலாம். போர்நினைவு எழும்போது, இங்ங்னம் புண்பட்டுக் கிடக்கும் வீரமறவனின் நினைவும் எழுமானால், அந்தப் போரின் நினைவே எழமாற்போகும் அல்லவா!
28. அவன் யார்?
தகடுரை வளைத்துக் கொண்டிருந்த சேரர் படைகள் தாம் எண்ணியபடியே கோட்டையை எளிதாகக் கைப்பற்ற இயலாது போயின. எதிர்பாராதபடி வந்து தம்மைத் தாக்கும் நொச்சி மறவர்களின் கடுமையான போரினை, அவை அடிக்கடி சந்திக்கவேண்டியும் இருந்தன. -
ஒருநாள், சேரரின் களிற்றுப்படை மறவர், தகடூர்க் கோட்டையைத் தாக்குவதற்கான ஏற்பாடுகளிலே ஈடுபட்டிருந்தனர். தகடூர்க் கோட்டையின் கதவுகளை உடைத்து உட்புகுவதற்கான முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தனர். பெரிய மரங்களைக் கொண்டவையாய், யானைகள் கோட்டைக் கதவுகளை மோதிக் கொண்டிருந்தன.
அந்த நேரத்திலே, திடுமெனக் கோட்டையின் மறைகதவு ஒன்று திறந்துகொண்டது. அதனின்றும் சில குதிரைவீரர்கள் கொடிய வேகத்துடன் பாய்ந்து வந்தனர். அந்தக் களிற்றுப் படையினரைத் தாக்கினர். சிறிது நேரத்தில் பல, களிறுகள் அங்கே வீழ்ந்தன. களிறுகளின் மேலிருந்த மறவர்களுட் பலரும் சாய்ந்தனர். - . -
தகடூர் மறவரின் தலைவனாக வெளிப்போந்தவன் அவ்விடத்தே பேராண்மையுடன் போரிட்டனன். அவனுடைய வாளின் சுழற்சிக்கும் எதிர்நிற்க மாட்டாத சேரர்கள். திகைத்துப்போயினர். தம் தலைவனின் ஆண்மையைக் கண்ட தகடூர் மறவர்களின் மறவெறி மிகுதியாயிற்று. அவர்கள், தாமும் வாளைச் சுழற்றிய வண்ணம் சேரர்களைச் சிதைத்துக் களித்தனர்.
சேரர்களின் படையணி தளர்ந்தது. அன்றையத் தாக்குதலை நிறுத்தவேண்டியும் வந்தது. சேரர் படைத்தலைவன் தன் முயற்சியின் சிதைவைக் கண்டு குமுறினான். அவன் சினம் பெருகிற்று. தானே முற்பட்டு வந்த, தகடூர்ப் படைத் தலைவனுடன் மோதினான். இருவரும் சற்று நேரம் கடும்போர் நிகழ்த்தினர்.