பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

87


நாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின் தேர்க்குழாம் நோக்கித்தன் மாநோக்கிக் - கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேல்நோக்கிப் பின்னைக் - கிணைவனை நோக்கி நகும். (புறத் 6ே9)

சேரப் படையின் பெருக்கமும், அது அணியணியாக வகுத்துநின்ற முறைமையும், இச் செய்யுளால் நன்கு அறியப்படும். - t

'கூர்த்த கணைவரவு நோக்கி’ என்பதற்குத் தகடுர்க் கோட்டையினின்றும் வருகின்ற அம்புகளை நோக்கி எனவும், 'தன் வேல் நோக்கி’ என்பதற்கு, அது கண்டு சினந்து தன் வெற்றிவேலை நோக்கி’ எனவும் பொருள் கொள்ளலாம்.

30. ஏந்துவன் போலான்

படை மறவர்கள் தத்தம் படையணிகளுள் வருகின்ற மறமாண்பினரின் ஆற்றல்களைக் குறிப்பிட்டு, எதிர்ப் படையினருக்கு முன்னால் நின்று முழக்கமிட்டு ஆரவாரிப்பதும் இயல்பாகும். இதனால், பகைப் படையினர்பால் அச்சம் எழுதலும், தம் படை மறவர்.பால் ஊக்கம் மிகுதலும் நிகழ்வனவாம். இங்ங்ணம் வீரமுழக்கத்துடனே வருகின்றான் ஒரு தலைவன் தகடூர் நாட்டுப் படையணியைச் சேர்ந்தவன் அவன்!

"பண்ணுதல் அமைந்த போர்க் குதிரையினை உடையவன் அவன்! அந்தக் குதிரையும் போர்க்களப் பயிற்சியிற் சிறந்ததும் வலிமிகுந்ததும் ஆகும் கண்களை இமைக்கின்ற கால அளவினை 'நொடிப்பொழுது என்பார்கள். வில்லினின்றும் வெளிப்படும் கணையானது அந்த நொடிப் பொழுதிற்குள் கடுவிசையுடனும் செல்லும் இயல்பினதாகும். கண் இமைப்பின் அளவிற் கடுமையான விரைவோடு சென்று தைக்கும் கணையினைப் போலக் குறித்த இலக்கினை நோக்கி வேகமாகச் செல்லக்கூடியது அந்தக் குதிரை! - -

“ஒருநாட் பகற்பொழுதில் அவன் படையணியின் முன்பாக வந்து போரிடற்கு நிற்கின்றனன். அவனைக் கண்ட தகடூர் மறவர் ஆரவாரிக்கின்றனர். தம்பால் வந்துள்ள தலைவனின் புகழைப் பேசி முழக்கமிடுகின்றனர்.

"சேரர் படையணிகளுக்குக் கேட்கின்றது அந்த முழக்கம். அவர்கள் அந்த வீர முழக்கினை இகழ்ச்சியுடன் ஒதுக்கி மேல் வருகின்றனர். அப்பொழுது, தகடூர் மறவன் ஒருவன் செருக்குடன்

கூறுவதாக அமைந்த செய்யுள் இது.