பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

89


திறத்தலால் புண்பட்ட மத்தகத்தையுடைய தன் யானையானது -

கதறுகின்ற குரலைக் கேட்டே கண்ணுறக்கம் கொள்ளானாய்க்

கலங்கியிருந்தனன் என்பதை மறவாதீர். -

அதனை நினைவிற் கொண்டு, அஞ்சி ஒதுங்குவீராக!'

அதிராது அற்ற நோக்கு ஞாயிலுள்

திர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல் எதிரிய திருவின் இளையோன் இன்றுந்தன்

திரை தோன்ற வந்துநின் றனனே - அவன்கை யொண்படை யிகழ்தல் ஒம்புமின் விழுச்சீர் விண்பொரு நெடுங்குடை வேந்தன் கண்படை பெறாஅன் வைகினன் இவன்கைத் திண்கூர் எஃகந் திறந்த - புண்கூர் யானை நவில்குரல் கேட்டே. (புறத் 137) 'பகற் போதிற் புண்பட்ட யானை இரவெல்லாம் கதறிக் கொண்டிருக்க, அதனால் வேந்தனும் கண்ணுறங்கானாய் இருந்தனன் என்க. இதனால், முன்னாள் அவ்வாறு வேந்துார் யானையைப் புண்படுத்திய அவன், இன்றும் தோன்றினன் எனில், நும் அரசையே கொல்லாமல் விடான்' என மறமாண்பு கூறியதாம். இவ்வாறு கூறத்தகும் தமிழ் மறவர்கள் பலர் இருதிறப்படையணிகளுள்ளும் தலைமை தாங்கி நடத்தினர் என்பதும் இதனால் விளங்கும்.

32. UIIITGÖNGUT காமின்

அந்த நாளிலே படையணிகளுள் யானைப்படைக்குத் தனியான ஒரு மதிப்பு இருந்தது. அதனை மிகுதியாகப் பெறுவதில் ஒவ்வொருவருமே ஆர்வம் காட்டினர். எதிர்ப்படும் எதனையும் அழித்து மேற்செல்லும் இயல்பினை யானைப்படை அந்நாளிற் பெற்றிருந்தது.

சேரமானிடம் யானைப்படை மிகுதியாகவே இருந்தது. படையணிகளுக்கு முற்பட்டுக் கம்பீரமாகச் செல்லும் அந்தக் களிற்றுப் படையினைப் பெரிதும் கவனமாகச் சேரர்கள் பேணியும் வந்தனர். - • *

களிறுகள் பிளறிக்கொண்டு கோட்டை மதிலைச் சென்று மோதிக்கொண்டிருக்கின்றன. அப்போது திடுமெனக் கட்டி போன்ற கருப்புக்குதிரை மேலாக ஒருவன் வந்து, அந்தக் களிறுகளை தாக்கி அழிக்க முயல்கின்றான். தகடூர் மறவனின் அந்த வீரச் செயலைக் கண்டு திடுக்கிட்டுச் சேரர் படைத்