பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

93


தகடூர் மறவர்கள் சேரர்து அந்த முயற்சியை எப்படியும் தடுத்தாக வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களது அந்த நினைப்பிற்கு ஊன்றுகோலாக விளங்கினான் ஒருவன்! மாவீரனாகிய அவன், தன் குதிரை மேல் ஏறியவனாகப் பாய்ந்து சென்றான். தன் கைவேலினை எறிந்து அந்த வலிய களிற்றைக் கொன்று ஆரவாரித்தான். பயங்கரமான குரலிட்டபடியே அந்தக் களிறு வீழ்ந்து துடித்துச் செத்ததைக் கண்ட பிறகளிறுகள் நிலைகெட்டு ஓடின. தம் படைஞரையே மிதைத்தும் தூக்கியடித்தும் நாசப்படுத்தியவாறு சென்றன.

செயற்கரிய செய்த அந்த மாவீரனின் செயலினைத் தகடுர் மறவர் மட்டும் புகழ்ந்தனர் என்பதில்லை. சேரரும் தமிழ்ச் சான்றோரும் புகழ்ந்தனர். தமிழ்ச் சான்றோர் வியப்புடன் பாராட்டுகின்ற செய்யுள் இது. -

“களிவெறி கொண்டானைப் போல அவன் வந்தனன். ஆனால், கள்ளுண்டு களித்தனனா எனில், அதுவும் அன்று. தனக்குப் போர் வாய்த்தது என்ற களிப்பினாலே தான் அவனுக்குக் களிவெறி பிறந்திருக்கின்றது.

“அவன் ஏறிவருவது குதிரைதான். பறவை எதுவும் அன்று. ஆயினும், அது வந்த வேகமோ பறவை ஒன்று பறந்து வந்தது போலத்தான் இருந்தது. --

"திடுமென வந்து தோன்றின அவன், மேலுலகத்து, வாழும் ஒர் தெய்வமோ எனில், தெய்வமும் அல்லன்; இவ்வுலகத்து மகனே அவன்! . . . .

"எளிமை தோன்றத் தெரிந்தெடுத்த பூக்களுடன் பசிய -

தழைகளையும் விரவிக்கட்டிய நொச்சி மாலையை அவன் குடியுள்ளான்! - - -

"எதிர்ந்தார் கண்டு வெருவி ஒடுதற்குத் தக்க வேலாற்றலை உடையவன் அவன்! அவன், வேலினை எறிந்தால், அது பருந்து தன் இன்ரயை நோக்கிப்பாய்ந்து வருவதுபோல விரைந்து வரும். பைய நிமிர்ந்து அவ்வேலும் அவன் கையினின்றும் புறப்பட்டுவிட்டது. அதனை அங்ங்ணம் சுழற்றி எறிந்தவனாக அவன் ஆர்ப்பரிக்கின்றனன். அப்போது அவன் வீர்க்கழல்கள் ஆர்ப்பொலி செய்கின்றன. - -

“தம் கால்களில் வீரக் கழல்களை அணிந்தவராக, உயரிய மலையிடத்து உலவும் புலியைப் போலச்சினமுடன் வேந்தர்கள் ஊர்ந்து வருகின்றவும், வெம்மையான சினமுடையவுமான களிறுகள் தம் அவ்வீரனின் வேலுக்கு இலக்காகிப்பட்டன.