பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

சோலை சுந்தரபெருமாள்


“எல்லாம் போயிடுத்து.”

“எப்போ?”

“சரியாய்ப் போச்சு; எல்லாம் இப்பதான்!”

தங்கம்மாள் தன் படுக்கைக்குச் சென்றாள்.

தூங்குகிறவளைப் போல ருக்கு கண்களை மூடிக் கொண்டிருந்தாள்.

“ஜல்.....ஜல்......”

ஒரு சபலம்.

“இதுதான் ஜனங்கள் இறங்கி வருகிற வண்டி. முதல்லே போகிற வண்டி போலிருக்கு. எழுந்திருப்போமா, வேண்டாமா?”

“லீவு கிடைத்ததும் வருகிறேன்.”

‘லீவு கிடைக்காமலே இருக்கட்டும்; இவர் வராமலே இருக்கலாம். எப்பவுமே இப்படித்தானே? பெண்டாட்டி, பிள்ளை இருக்கிறவா லீவு கொடுக்காமலா இருப்பா? வேணும்னால் எல்லாம் வரலாம். இருக்கட்டுமே!’

ருக்குவுக்கு இப்போது தலையணை மீது ஆத்திரம் வந்தது. கால் மாட்டில் ஒன்றை எடுத்துத் தூக்கி எறிந்தாள். கடிகாரத்தில் மணி ‘டங்’ என்று ஒரு தடவை அடித்துவிட்டு நின்றது.

“மணி ஒண்ணா, பன்னிரண்டரையா?”

ஸ்டேஷனில் “கூ” என்று மறுபடியும் ரெயில் கூவியது. ஷட்டில், பார்ஸல் பாஸ்ட் பாஸஞ்சர்.

“லீவு கிடைத்ததும் வருகிறேன்.”

ருக்கு ஒரு தடவை புரண்டு படுத்தாள். மூடின கண்கள் திறக்க முடியாமல் இருந்தன.

ருக்கு தூக்கத்தில் ஆழ்ந்து போனாள்.

ஆனால் தங்கம்மாள் தூங்கவே இல்லை. காரணம் இல்லாத விசாரம் அவள் மனசைக் கலக்கிக் கொண்டே இருந்தது. 'மணி பன்னிரண்டரை; ருக்கு தூங்கவேயில்லை. அநேகமாய் வந்ததிலேயிருந்து தினமும் இப்படித்தான். ஏன்? வானத்திலே நட்சத்திரம் ஒன்று, ஒன்றும் தெரியாது என்பதைப் போல் மினுக்கியது. ‘சனியன்; இலை அசங்கல்லியே இப்படியா புழுங்கும்?’

காற்று வராததற்குக் கவலைப்படுவதா? ருக்குவுக்காகக் கவலைப்படுவதா?

திடீரென்று ரங்கனை வந்து அழைத்துப் போகும்படி வேணுவிடமிருந்து கடிதம் வந்தது. மறுநாளே ருக்குவை. - அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான் ரங்கள். தங்கம்மாளுக்கு மனசுக்குள் விசாரந்தான்... “வா அம்மா குழந்தை ” என்றபடியே ருக்குவின் முகத்தை ஆராய்ந்து பார்த்தாள். முக காந்தி