பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

சோலை சுந்தரபெருமாள்


இரண்டாம் கால பூஜை. மேளமும் சங்கும் தாரையுமாக அமர்க்களப்படுகிற அந்த வேளையில். இன்று இந்த நிசப்தம் நிலவுகிறது. யாருக்கு சீட்டு கிழிந்துவிட்டதோ?

கதவைத் தட்டினேன். கௌரி வந்து திறந்தாள்.

"ஏன் கோவில் பூட்டிக் கிடக்கு?"

"எல்லாம் விசேஷம்தான்" என்று கதவைத் தாழிட்டாள் அவள்.

"என்ன ...?"

"தெற்கு வீதியிலே யாரோ செத்துப் போயிட்டாளாம்.”

"யாராம்?"

"எல்லாம் உங்க கதாநாயகிதான்."

"என் கதாநாயகியா? அப்படி ஒருத்தரும் இருக்கக்கூடியதாக தெரியலியே!"

"செத்துப்போன அப்புறம்தானே இந்த மாதிரி மனுஷா எல்லாம்-- உங்களுக்கு கதாநாயகி ஆகிற வழக்கமாகச்சேன்னு சொன்னேன்..."

"எந்த மாதிரி மனுஷா?"

"தருமு மாதிரி."

"தருமு யாரு?"

"துர்க்கை அம்மன்கிட்ட வரம் கேட்பாள்னு சொன்னேளே, அந்த ஜில்தான்..."

"ஆ...அவளா!"

"என்ன மூச்சை போட்டுட்டேள்?"

மூர்ச்சை போடக் கூடிய செய்திதான்... தர்மூவா செத்துப் பேய் விட்டாள்? முந்தாநாள் கூட கோவிலிலே பார்த்தேன். என்னைக் கண்டதும், நாணத்திலும் பயத்திலும் விறுவிறுவென்று நடையைக் கட்டிவிட்டாள்! இன்னும் கண் முன்னே இருக்கிறது.

"முந்தாநாள் ராத்திரி கூட கோவிலிலே பார்த்தேனே!".

"பார்த்தா என்ன? நாலு மணிக்கு பார்த்தாவாளை நாலே கால் மணிக்கு பார்க்க முடியவில்லை; மாரடைச்சு பொத்துனு விழுந்து பிராணன் போய் விடுகிறது."

"என்ன உடம்பாம்?"

"என்ன உடம்பு இருக்கும் இதுகளுக்கு? பாம்புக்காரனுக்கு பாம்புதான் எமன், புலியை வச்சு ஆட்றவனை புலி தான் விழுங்கும்."

நான் சமைந்து போய் உட்கார்ந்தேன். தருமுவின் மெல்லிய உருவம் நிழலாடிக் கொண்டிருந்தது.

முந்தாநாள், இரண்டாங்கால பூஜை முடிந்ததும் கோவிலுக்குப் போயிருந்தபோது, அவள் நிகு நிகு என்று தீட்டித் தேய்த்த கத்தி மாதிரி நடந்து போய்க் கொண்டிருந்தாள். கோயிலில் ஒரு பிராணி இல்லை. நுழையும்போதே வெளிப்