பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

139


அளவுகோலைக்கொண்டு இவர்களுக்கு இந்த நியாயம் வழங்கப்பெறுகிறது?” என்று ஆவேசக் குரலில் கேட்டார் அங்கு நின்று நின்று கால் கடுத்துப்போன ஒரு வக்கில் குமாஸ்தா.

“வாழ்க்கைப் போராட்டத்தில் பலமுள்ளவையெல்லாம் பலவீனமானவற்றை வென்று, பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறுவது இயற்கை!” என்று வறண்ட புன்னகையுடன் பதில் சொன்னார். கல்லூரிக்கு நேரமாகிவிட்டதே என்ற கவலையில் ஆழ்ந்து நின்ற ஓர் உயிரியல் பேராசிரியர்.

‘ஹூம்! எல்லாம் அவரவர் வந்த வழி!” என்று சலிப்புடன் முகத்தைக் களித்தார் ஒரு கோயில் அர்ச்சகர்.

“வழியாவது, விதியாவது! இங்கே தினந்தினம். அடிக்கொருதரம் ஆட்டுமந்தைக் கூட்டம் போல் நின்று அவதிப்படுகிற இந்த ஜனங்கள், அதோ இருக்கும் டிச்சிப் பள்ளத்தில், ஆளுக்கொரு பைசாவீதம் வீசியெறிந்தால் கூட, அந்தப் பணத்தைக் கொண்டு ஆறு மாசத்திற்கெல்லாம் ஒரு மேம்பாலத்தைக் கட்டி முடித்திருக்கலாமே!” என்று அலுத்துக் கொண்டான் பொருளாதாரப் பாடத்தில் ‘கோட்’டடித்த ஒரு டியூடோரியல் கல்லூரி மாணவன்.

இப்படி எழுந்த இந்தக் காரமான பேச்சுக்களைக் காது கொடுத்துக் கேட்டுத் தம் கவலையை மறந்து நின்ற ஜனங்களின் கவனம், திடீரென்று வேறு திசையில் திரும்பியது. சோதனைகள் மிகும்போது, முகத்தின் அறிகுறிகள் கூடவே தோன்றும் என்று சொல்வதில்லையா? அவலச் சுவையான நாடகம் நடந்து கொண்டிருந்தாலும், இடையிடையே ஹாஸ்யச் சுவை வழங்க பபூன் தோன்றுவதில்லையா? அந்த மாதிரி, அங்கே குழுமி நின்ற ஜனங்களின் கோபதாபக் குமுறல்களைச் சாந்தப்படுத்துவதற்கென்றே கிளம்பி வந்தாற்போல் ஒரு வேடிக்கைச் சம்பவம் நிகழ்ந்தது. ஒவ்வொரு முறை அந்த லெவல் கிராஸிங் கதவுகள் சாத்தப்படும் போதெல்லாம். வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி தான் அது. அங்குள்ள ஜனங்களில் பலர் அநேகமுறை பார்த்து ‘ரசித்த’ காட்சியும்கூட. அத்துடன், அந்த ஹாஸ்ய நிகழ்ச்சி, ஒரு நாடோடிப் பிறவியின் வயிற்றுப் போராட்டத்திற்காக நிகழப் பெறுவது என்பதும் அவர்கள் அறிந்த விஷயமே. ஆயினும் அதைத் திரும்பத் திரும்பக் காண்பதிலே அவர்களுக்கோர் அலாதி மகிழ்ச்சி. கால் கடுப்பைப் போக்கிக்கொள்ள அது கண் கண்ட லேகியம். எனவே, எல்லாருடைய கவனமும் ஒருசேரத் திரும்பியது.

சடையும், செம்பட்டையுமாகக் கூடு பின்னிய காய்ந்த நிலை; சிறிய முகம்; இரும்பு வளையம் கோத்த செவிகள்; வெள்ளை, கறுப்பு, பச்சை, சிவப்பு முதலான வண்ண மணிகள் அணிந்த கழுத்து; சூணாம்வயிற்றுக்குக் கீழே மணி வடத்தாலான