பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

சோலை சுந்தரபெருமாள்



கிழக்குறத்தி அவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு சாவதானமாக எழுந்து, பொங்கிக் கொதித்த அவியல் சோற்றை ஒரு துடுப்பால் கிளறிப் பதம் பார்த்துவிட்டுத் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே வாலியக் குறவனை நோக்கி வந்தாள்.

கோபமும் குமுறலுமாக எதிர் சென்ற திண்டிகோடா அந்தக் கிழவியிடம் ஏதோ படபடவெனப் பேசினான். சற்று முன் பையன் வந்து சொன்ன விவரங்களை, அவனிடம் அவன் சொல்லியிருக்க வேண்டும். கிழவியின் முகம் சுண்டிச் சுருங்கியது. “தூ! தூ!” என்று காறித் துப்பினாள். திண்டிகோடா விறைப்பாக வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்தான்.

“ஏ, மயிலங்கோடா! இத்ரே லபோ!” என்று இரைந்து கூப்பிட்டாள் கிழவி.

குப்பையைச் சீய்த்துக் கொண்டிருந்த ஒரு ஜோடி கவுதாரிகளைக் கூண்டில் அடைப்பதற்காக, அவற்றை விரட்டிக் கொண்டிருந்த பையன் ஓடிவந்தான். அவனிடம் கிழவி ஏதோ கேட்டாள். வாலிபக் குறவனிடம் சொன்ன வார்த்தைகளை அவளிடமும் ஒப்பித்தான் பையன். கிழக்குறத்தி மேலும் கிளறிக் கிளறிக் கேள்விகள் தொடுத்தாள். “செப்புத்ரே! செப்புத்ரே!” என்று அதட்டினாள் கிழவி. பையன் தலையைச் சொறிந்து கொண்டு முகத்தைச் சுளித்தான். லெவல் கிராஸிங் கதவுகள் சாத்தப்படுவதற்கு அறிகுறியாக மணிச் சத்தம் கேட்டது. பையன் தன்னிடமிருந்த ஐந்து பைசாவைக் கிழவியின் முகத்திற்கு நேரே சுண்டிப் பிடித்து அவளுக்கு ‘நங்கு’ காட்டிவிட்டு லெவல்கிராஸிங்கை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

“ஏ, -தண்டிகோடா ! இத்ரே லபோ!” என்று புன்முறுவலுடன் விழித்துக்கொண்டே, இடுப்பைப் பிடித்தவாறு வாலிபக்குறவனிடம் சென்றாள் கிழவி. அவன் அவளைத் திரும்பிப் பார்க்காமல் எங்கோ வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். கிழவி அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி இதமான குரலில் ஏதோ சொன்னாள். அவள் சொல்வதை மறுப்பவன் போல் வேகமாகத் தலையசைத்து கையை ஆட்டினான் திண்டிகோடா. கிழவி தான் சொன்னதையே திரும்பத் திரும்ப அழுத்திச் சொன்னாள்.

திண்டிகோடா அவளை முறைத்துப் பார்த்தான். பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல் ஆவேசமாகப் பாய்ந்து சென்று கூடாரத்தைப் பிய்த்தெறிந்தான். அதனுள்ளிருந்த தட்டுமுட்டுச் சாமான்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். “ஏ, திண்டிகோடா! ஏ, திண்டிகோடா!” என்று அலறிக்கொண்டே ஓடிவந்து அவனைத் தடுக்க முயன்றாள் கிழவி. திண்டிகோடா அவளை நெட்டித் தள்ளிவிட்டு, வளைப்படல்களையும் தகரக்