பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கரிச்சான் குஞ்சு

ஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதின்புரத்தில் பிறந்த நாராயணசாமி, தன் உயிர் நண்பர் கு.ப.ரா.வின் நினைவாக தன் பெயரை கரிச்சான் குஞ்சு என்று இட்டுக் கொண்டவர். (கு.ப.ரா கரிச்சான் என்ற பெயரில் சிறுகதை தவிரப் பிறவற்றை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

இவர் எழுதிய கதைகளில் மனித பலவீனங்களைப் பற்றிய எள்ளலும் போலித்தன்மைகளைச் சாடும் சினமும் வெளிப்பட்டதோடு, கலைஞானம் மிகுந்த மாந்தர்கள் தமது திறமையை முழுமையாகப் பிரதிபலிக்கும் போக்கும் தலைதுாக்கி நிற்கக் காணலாம்.

நீண்டகாலம் மன்னார்குடியில் ஆசிரியராக வாழ்ந்த கரிச்சான் குஞ்சு அசல் தஞ்சாவூர் பாரம்பரியத்தில் வளந்தவர். சமஸ்கிருதத்திலும், இசை முதலிய கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர். வடமொழியில் வேதம் வியாகரணம் படித்து தமிழிலும் சங்க இலக்கியங்களைக் கற்றார். கு.ப.ராவின் சீடர்களில் குறிப்பிடத்தக்கவர்.

சொற்சிக்களத்துடன் எழுதப்பட்டிருக்கும், ‘ரத்தசுவை’ சிறுகதை கரிச்சான் குஞ்சுவின் இலக்கிய உணர்வையும், சிறுகதைக் கொள்கையையும் விளக்குகிறது.