பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

சோலை சுந்தரபெருமாள்



“நீங்கள் என்னதான் சொல்லவேண்டும் என்கிறீர்கள்?” எழுந்து உட்கார்ந்தாள்.

“நீ ஏன் ஒன்றும் சாப்பிடாமல் வருத்தமாகப் படுத்துவிட்டாய்?”

“பசிக்கவில்லை என்றேனே!”

“பொய். நீ என்னை ரொம்பவும் அவமானம் செய்கிறாய்.”

“நான் பேசினாலும் அவமானம். பேசாவிட்டாலும் அவமானம் என்கிறீர்களே!”

“பேசாதிருப்பதே அவமானம் ஆகாதா?”

“எனக்குத் தெரியாது!”

“அதைத்தான் கேட்கிறேன். நீ ஏன் என்னிடம் சரிவரப் பேசுவதில்லை? ஆயிரம் கற்பனைகளைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறேன். ஆனால் உன்னுடைய வாடிய முகம் எல்லாவற்றையும் கவிழ்த்து விடுகிறது. என்னால் பிறகு எழுத முடியவில்லை.”

“நான் தடுக்கவில்லையே?”

“அமைதி இழந்த குடும்ப வாழ்க்கை எழுதுவதற்கு முட்டுக்கட்டைதானே? திருப்தியும், சந்தோஷமும் நிறைந்த குடும்பந்தான் ராஜ்யம் நிலைக்க உதவும் என்று ஒரு பெரிய சரீர சாஸ்திரி கூறுகிறார்.”

“எனக்குப் புரியவில்லை. நீங்கள் பேசுவதெல்லாம்.”

“எத்தனை எத்தனையோ பேர் என்னை எத்தனையோ விதமாகப் புகழ்கிறார்கள். என்னைக் காண்பதையே பாக்கியம் என்று நினைக்கிறவர்களும் உண்டு. எனக்குக் கிடைக்கும் இந்தப் பெருமை உனக்கு இல்லையா?”

“உம்”

“பின் ஏன் என்னை அலட்சியம் செய்கிறாய்? நான் ஏழை என்கிற அற்பக் காரணத்துக்காகத்தானே? பனந்தான் சாகவதம் என்று நினைக்கிறாயோ?”

“எதுதான் சாகவதம் இந்த உலகில்?” “ஜரிகைப் புடவையாலும், வைர நகையாலும் உண்மையான பெருமை அடைந்துவிட முடியாது.”

“நான் ஜரிகைச் சேலை கட்டக்கூடாது. நகை அணியக் கூடாது என்கிறீர்கள். அதுதானே?”

அவனுடைய பதில் வளர்ந்தது. “நான் அதைச் சொல்ல வரவில்லை. இருக்கிறோம், இறப்பதற்கு. அதற்குள் நம்மால் உலகத்துக்குச் செய்ய முடிந்ததைச் செய்துவிட வேண்டும் என்றுதான் என் எண்ணம். அதுவும், இது ஒரு யுக சந்திக் காலம், சந்தி என்றால் பொழுது விடிவதற்கு முன்னதா அல்லது அஸ்தமிப்பதற்கு முன்னதா என்றே புரியவில்லை. மேல்நாட்டு