பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

சோலை சுந்தரபெருமாள்


எடுத்துக்காட்டிற்று. சரியாகப் படுத்துக் கொண்டான். முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். கண்களைக் கொஞ்சமாக முடிக்கொண்டான்.

“சின்னச்சாமி சின்ன புத்திக்காரா!...

என்ன காரியமடா... கசடனே!”

என்று ஒரு பகங்கரமான குரல் அவன் நெஞ்சுக்குள்ளேயே கிளம்பியது.

ஒரு நிமிடம் அமைதி. அய்யோ! அந்த ஒரு நிமிடத்தில் அவன் இரத்த ஓட்டத்தில் எவ்வளவு கொதிப்பு! நரம்புகள் எல்லாம் நடுங்கின. நாவில் நீரில்லை. உதடுகள் வறண்டு விட்டன. கையை மெதுவாக எடுத்தான். உள்ளங்கையில் வியர்வை கொட்டிற்று. வேட்டியில் துடைத்துக் கொண்டு, கையைக் காந்தாவின் மேல் மெதுவாகப் போட்டான். அவள் ஆயாச மூச்சோடு நகர்ந்து படுத்தாள்.

“ஏய் பாதகா! பரம சண்டாளா! மகளடா மகள்! நீ பெற்ற மகள்!,.. மகா பாதகத்தைச் செய்யாதேடா மடையா!... மண்டை வெறி பிடித்தவனே!” .

அவன் தலையில் ஆயிரம் சம்மட்டி அடிகள். ஆங்காரமான குத்துக்கள். கொடூரமான அரிவாள் வெட்டுக்கள். சின்னச்சாமியின் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. ஈரமற்ற நாக்கால் உலர்ந்துபோன உதடுகளை ஒரு முறை நக்கிக்கொண்டு பேசாமல் படுத்திருந்தான். சற்று அமைதி. அந்த அமைதியும் மின்னலாய் மறைந்தது. விஷமேறி நடுங்கும் அவன் ஈர விரல்கள் மீண்டும் காந்தாவின் முகத்தில் விழுந்தது. நத்தைகள் ஊர்வது போல நகர்ந்துகொண்டிருந்தன. அந்த விரல்களைக் காந்தாவின் நடுங்கும் கரம், லேசாகப் பற்றியது... பற்றியது மட்டுமா? மெதுவாக அமுக்கியது.

இடிகள் பல இடிப்பதுபோல மின்னல்களும் பல மின்னுவது போலத்... திடீரெனப் புயல் கிளம்பிப் பூகம்பம் ஏற்பட்டுக் கடல்கள் குமுறியெழுந்தது போலத் தடதடவென ஆட ஆரம்பித்தன. இரண்டு இரத்த பாசமுள்ள உடல்கள். கால் பக்கமிருந்த விளக்கைச் சின்னச்சாமி உதைத்தான். அது கீழே சாய்ந்து அணைந்து போய், எண்ணெய் தரையில் கொட்டியபடி உருண்டது.

கடவுள் அந்தக் கற்பனைப் பெயரால் ஏற்பட்ட தலைவிதி-தலைவிதிக்காளான சமுதாயம்-அந்தச் சமுதாயத்திற்கேற்பட்ட சட்டம்-அந்தச் சட்டத்தை முறை தெரியாமல் உடைத்தெறிந்த இரு சண்டாளர்கள்-வாழ முடியாதவர்கள்!

பொழுது சரியாக விடியவில்லை. மங்கலான வெளிச்சம் வீட்டுக்குள் நுழைந்தது. சின்னச்சாமி விழித்துக்கொண்டு காந்தாவின் முகத்தைப் பார்க்கத் திரும்பினான். அவன் கண்கள்