பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மஞ்சி விரட்டுப் பூரணி

ர் மூக்கின் மேல் விரலை வைத்தது!

செம்பவளம் தீர்ப்பு வழங்கிவிட்டாள்.

“வாழ்க்கை என்கிறது ஒரு வெளையாட்டுக் கணக்காகும். பல்லாங்குழி, தாயம்னு ஆடறதில்லையா? அப்படித்தான். கெலிக்கவும் கெலிக்கலாம்; தோற்பு ஏற்பட்டாலும் ஏற்படலாம்; இப்படியான ரெண்டு மனநிலைகளையும் சரிசமதையாகப் பாவிக்கிற வீர உணர்ச்சி என்னோட இந்தப் பாளத்த மனசுக்கு இப்பதான் கூடவந்திருக்கு கைகூடியும் வந்திருக்கு. மஞ்சி விரட்டு பந்தயக் கெடுவிலே தான் நான் புதுசாய்ப் பொறக்கவேணும் என்கிறது ராக்காச்சி ஆத்தாளோட தீர்ப்புப் போலே-நான் என்னோட பவித்திரமான ஆசைக்கு ஒரு நல்ல பேரை உண்டாக்கிக் காட்டிப்புட வேணும்னு கனாக்கண்டு, அந்தக் கனாவுக்கு ஒரேயொரு அன்பான வடிவமாக அமைஞ்சிட்ட என்னோட நேச மச்சானை - அதான், எங்க மாங்குடி மச்சானை இந்தப் பொங்கல் கடுத்தத்திலே கண்ணாலம் கட்டிக்கிட்டு அந்த ஆம்பளைச் சிங்கத்துக்கே முந்தானை விரிச்சுப் போடணும்னு தான் ரோசனைப் பண்ணியிருந்தேன். ஆனாக்கா, எம்புட்டு மனசான மனசைத் சோதிக்கிறதுக்குன்னு என்னென்னமோ தகவல்கள் ஏற்பட்டுப் பூடுச்சி. எல்லாத் தீவினைங்களும் எதாலே வந்ததின்னு ஒங்களுக்கெல்லாம் புட்டு வச்சாப்பிலே தெரியவும் தெரியும்; அசலான பூலோக ரம்பையாட்டம் நான் இந்தப் பூவத்தக்கூடி மண்ணிலே ஓடி ஆடினதாலே எம்மேலே யார் யாரெல்லாமோ எப்படி எப்படியெல்லாமோ ஆசை வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. பாழாய்ப்போன இந்தச் சோதிப்பிலிருந்து விடுதலை அடையறத்துக் கோசரமே தான். நானே எனக்கின்னு ஒரு சோதிப்பை ஏற்படுத்திக்கிடவும் துணிஞ்சேனாக்கும்.”

சிலந்திப் பூச்சி தான் அகப்பட்டுகறத்துக்கின்னே வலை பின்னிக்கிட்ட கதைதான்! பொல்லாத பாச்சல் காளை அப்படின்னு திக்கெட்டும் பேரெடுத்திட்ட எம்புட்டு ஆலத்தம்பாடி பூரணி செவளைக் காளையை இது மட்டுக்கும் கண்ணாலம் கட்டிக்கிடாத எந்த இளவட்டம் இந்த மஞ்சி விரட்டிலே