பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பட்டாளக்காரன்

நாற்புறமும் சிறிய கைப்பிடிச்சுவர். அதனுள் பத்து சிறிய வீடுகள். வீடுகளுக்குப் பின் பக்கத்தில் சிறிய தோட்டங்கள். முன்புறம் விசாலமான இடைவெளி, அதிலே அடர்த்தியான மரங்கள். மரநிழல் இல்லாத இடங்களில் தரையில் பசும்புல். வெயில் கள்ளென்று அடித்தபோதிலும் ஊடே குளிர்காற்று விசிற்று. முற்பகல் பதினொரு மணி இருக்கும்.

“மூங்...ஃபல்லிஈஈஈ...”

ஒலி, மத்திய தைவதத்தில் தொடங்கி உச்ச நிஷாதத்தில் முடிவடைந்தது. அந்தத் தொனி சுவர்களில் மோதி நெடு நேரம் எதிரொலித்தது. எதிரொலி முடியும் முன்பு மறுபடியும் அந்த ஓசை புறப்பட்டது.

“அம்மை... பட்டாளக்காரன் வன்னு!”

“அது யாரடி பட்டாளக்காரன்?”

“அதான் அம்மே கப்பலண்டி விக்கன்னனவன். அம்மே, எனிக்கிக் கப்பலண்டி வேடிச்சுத் தரணம்.”

“தராம் மகளே தராம்; கரையண்டா, விளிக்கண்ணே ஆயாளை!”

பேசியவர்கள் ராபர்ட் சூரியனின் மனைவியும் அவர்களுடைய நாலு வயது மகள் டெய்ஸியும். சூரியனுக்குச் சொந்தஊர் கொட்டாரக்காரை. அவருடைய மனைவி மரியாள் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்தவர். அவளுடைய தாய்மொழி தமிழே. ஆனாலும் பழக்கத்தின் காரணமாக வீட்டில் மலையாளத்திலேயே பேசினார்கள்.

சத்தத்தைக் கேட்டு நானும் வெளியே சென்றேன். கூடவே என் மகள் ரோஸியும் தம்பி ஜேம்ஸைக் கீழே விட்டுவிட்டு என்னுடன் வந்தாள். வந்தவன் வேர்க்கடலை விற்பவன். இராணுவத்தார்களின் பச்சைச் சட்டையும், காக்கிக் கால்சட்டையும் அணிந்திருந்தான். வயது முதிர்ந்தவனாகக் காணப்பட்டான். தலையில் ஒரு முடிகூட இல்லாமல் வழுக்கை இட்டிருந்தது. ஆனால் உடலில் ஒரு பளபளப்பு. விரிந்த பெரிய நெஞ்சு, நீண்ட கைகள், முழங்கால்களை நெருங்கின. தன்