பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

203


போட்டிருக்கிறேன். வைஸ்ராய்வேலுக்குக்கூட நான் பாடமன்னாக இருந்ததுண்டு. அப்போது அவர் சாதாரண மேஜராக இருந்தார்....மூங்ஃபல்லிஈஈ...” தாத்தா வேர்க்கடலை விற்பனையைத் தொடங்கினார்.

மறுநாளிலிருந்து தாத்தா தினமும் பிற்பகலில் எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரின் பொருள்களைச் சுத்தம் செய்து கொடுத்தார். நாளடைவில் அவருடைய சிபாரிசின் பேரில் அந்த விடுதியில் இருந்த அனைவர் வீடுகளிலிருந்தும் அந்தோணிக்கு வேலை கிடைத்தது. மாதம் பத்து ரூபாய் வருமானத்திற்குக் குறைவில்லே.

ஆலமரத்தடியில் அந்தோணித் தாத்தா குழந்தைகளினிடையில் உட்கார்ந்திருக்கிறார். அவர்களுக்குத் தாத்தா ஒரு விளையாட்டுச் சாதனம்.

“தாத்தா இந்த வயதில் எப்படி இவ்வளவு பலசாலியாக இருக்கிறாய்?” ஆரோக்கியம் என்ற பெண் வினவினாள். அவள் திருமல் கிரி கான்வெண்ட் பள்ளி மாணவி.

தாத்தா தனது சட்டையினுள்ளிருந்து முண்டாவை வெளிப்படுத்திக் காட்டினார். “பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது. வெயிலிலும் காற்றிலும் இந்த உடலை நன்றாக அலையவிடணும். குழந்தைகளிடம் அன்பாயிருக்கணும். கர்த்தரை விசுவாசிக்கணும். அதுதான் வழி” தாத்தா தெளிவுடன் கூறினார். தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் கண்கள் பனித்தன. தூய வாழ்வு முறையைப் பற்றிய பெருநூலொன்றைப் படித்த நிறைவு என் உள்ளத்தில் ஏற்பட்டது.

சின்னக் குழந்தைகளுக்கு மிருகங்களைப் போல வாயினால் ஓசை செய்து வேடிக்கை காட்டினார் தாத்தா. பாடல்கள் பாடினார். அவர்களுக்கேற்ற சிறுகதைகள் சொன்னார். தான்சென்று வந்த பல்வேறு நாட்டுச் சிறுவர் சிறுமியர்களது நடைமுறைகள் குறித்து விவரங்கள் கூறினார். நாளடைவில் அந்தோணித் தாத்தா எங்கள் விடுதியின் இன்றியமையாத உறுப்பினர் ஆகிவிட்டார்.

மழை ஓய்ந்து அடுத்த பருவம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரக்கொன்றை மரங்களில் இருந்த இரத்த வர்ண மலர்கள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. மரங்கள் இலைகள் இன்றி நின்றன. குளித்துவிட்டுச் சிரிந்து நிற்கும் சிறுவனைப் போல் தோற்றமளிக்கும் மெளலா அலிக்குன்றை வெண்திரை சூழ்ந்தது. காலையிலும், மாலையிலும் குளிர்காற்று வீசத் தொடங்கிற்று. கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்கான முன்னறிவிப்புக்கள் இவை!