பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
யார் துணை

இது நேற்று நடந்தது.

ஒரே இருட்டு கும்மிருட்டு. அழுகத் தேங்காய்க்குள்ளே நுழைஞ்சு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி. பிரஸ்ஸிலே மிஸின்மேன் சிலிண்டர் இங்கைத் தொடச்சுப் போட்ட பேப்பர் மாதிரி கீற்றுகீற்றா வானத்தில் கொஞ்சம் வெளிச்சம்.

நான் தூங்கிக் கொண்டிருக்கேன். நல்ல தூக்கம். நல்ல தூக்கமா? என்றைக்கய்யா நல்ல தூக்கம் தூங்கினேன்! ஏதோ துங்குகிறேன். விழித்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு தூக்கம் நடுநிசி.

“சார் தந்தி.”

“கதவு ஓட்டை வழியா போட்டுட்டுப் போய்யா!”

என்றோ என்றைக்கோ -யார் கண்டா? -சொன்னேன்.

“டேய், உங்க ஊர்லே ஒரு வேலை இருந்தா பாருடா. இங்க பசங்க ரொம்ப மோசம். நூத்தி ஐம்பது ரூபாய் தரேன்கிறான். நாலுநாள் லீவு போட்டா மூணு நாள் சம்பளத்தே புடிக்கிறான். என்னடான்னா இஷ்டமில்லேன்னா ஓடுங்கறான். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு முதலாளிங்கறான். பெட்டியிலே கருப்புப் பணம் கள்ளக்கணக்கு எழுத எனக்குக் கை வந்து போச்சு.

“உடனே கிளம்பு. நாளை, மறுநாளைக்குள் எதிர்பார்க்கிறேன். அவசரம்.”

இதுவா தந்தி. கிட்டா கல்கத்தாவிலே இருக்கான். டில்லியிலிருந்து தந்தி. பய என்னிக்கி அங்கே போனான். பக்கத்து வீட்டிலே எவனாவது என் பேருள்ளவன் இருக்கானா? இல்லே... நானேதான்.

ஓடினேன்... ஓடினேன். குதிகால் தரையில் வேரூன்றிப் போச்சு, ஆணிவேர் அறாமல் எப்படிச் செடியைப் புடுங்குவது −தண்ணி ஊத்தி புடுங்கினா? உளை விழுந்த நிலம் மாதிரி பொதபொதன்னு சேறு. உழப்போன மாடு உள்ளே புதையுது. கொம்பு தெரியுது. மூக்கணாங்கயிற்றைப் புடிச்சு மேலே தூக்கு.