பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

213



“ஆமான்னு வைச்சுக்க... பணம் கொட்டிக்கிடக்குது. கறுப்புக் குதிரையில்லே ஓடுது அங்கே.” -

“டாக்சி டாக்சி. காரைப் புடிச்சுக்கிட்டே நானும் வரேன்யா.”

“டாக்கி டாக்சி.”

முப்பது வருவடிம் முப்பத் தொன்பது நிமிஷமாச்சு. இன்னும் ஒரே நிமிஷம். ஒரே ஒரு நிமிஷந்தான். மீனம்பாக்கம் தொலைவில் இல்லே. ப்ளேனைப் புடிச்சிடலாம்.

‘டாக்சி டாக்சி.’

நாயைப் போல இறைக்குது. கண்ணை இருட்டுது. அதோ... அதோ... ஒரே உந்தல். ஒரே ஓட்டம். கொய்ங்குன்னு சப்தம் காதைத் தொளைக்குது. அடக் கடவுளே! ப்ளேன் கிளம்பிப் போச்சா. எத்தனை வருஷமா ஓடுறேன். முப்பது வருவடிம் நாற்பது நிமிஷம் அதுக்குள்ளே ஆச்சா. தலைக்கு நேரே... மேலே... மேலே கொய்ங்கின்னு பறக்குதே. கண்ணுக்குத் தெரியுதே. ஏணி வெச்சாலும் இனிமே எட்ட முடியாதே. அடக்கடவுளே! மேகத்துக்குள்ளே பூந்து மறைஞ்சு போச்சே.

கண்ணை இருட்டுது. காதை அடைக்குது. நாக்கு வரண்டு போச்சு. இமையைப் பாரமாய் அழுத்துவது வாழ்வு. இமைக்கதவை நீக்கி வெளியிலே பார்க்கிறேன். இருட்டு... ஒரே இருட்டு. ப்ளேனோட சத்தம் அடிவானத்தில் போய் அழுந்திப் போச்சு.

அடக்கடவுளே! இதற்குக் கூடவா நான் கொடுத்து வைக்கவில்லை. நான் அன்றாடம் காய்ச்சி அவனெல்லாம் குதிரிலே மொத்தமாய்க் காய்ச்சிக் கொட்டிக்கொண்டு வைக்கோல் கருணையைப் பிடுங்கிவிட்டு வாய்வைத்துக் குடிக்கிற பயல்களா? அவன் கடைவாயில் ஒழுகுகிறதை நீ நக்கிக் குடிக்க அனுமதி கொடுத்தானா? நீ அவன்களுக்கே துணை போகிறாயே!

எனக்கு யார் துணை?