பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

சோலை சுந்தரபெருமாள்


ஓட்டிக்கிட்டுவா... நான் லாரிய முன்னால எடுத்துக்கிட்டு வர்றேன்.”

“இல்ல... இல்ல... நீங்க போய் மொகைதீன்பாய் கிட்டயே புடிச்சிக்கிட்டுப் போங்க” என்று ராஜேந்திரன் மோட்டார் சைக்கிள் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

“அவன் சின்ன பய சார். அத விடுங்க சார்-” என்று பின்னால் போய் ஆடுகளை முன்னால் விரட்டிக் கொண்டு வந்தான்.

ஆடுகள் லாரி பக்கம் வந்ததும் கிளினர் சுப்பு பெரிதாக இருந்த ஓர் ஆட்டை எட்டிப்பிடித்தான் டிரைவர் அதைத் தூக்கி லாரி உள்ளே போட்டான். இன்னொரு ஆட்டைப் பிடிக்கும்போது, ‘அண்ணே நிஜமாவே ஆடுயெல்லாம் இன்ஸ்பெக்டர் ஆடா இருக்குமா அண்ணே’ என்று கேட்டான்.

“இருக்குண்டா, இப்பதான் இன்ஸ்பெக்டர் போலீஸ்காரன் எல்லாம் கண்டதையும் வாங்கிப் போட்டு காக பண்ணுறாங்களே”

“எனக்கு என்னமோ பயமா இருக்கு அண்ணே”

“ஊரான் வீட்டு ஆட எவண்டா புடிச்சி விற்பான்”

சப்-இன்ஸ்பெக்டர் லாரியை நோக்கி வந்தான்.

“அண்ணே ஆளு”

டிரைவர் சக்கரபாணி லுங்கியை மேலே தூக்கி கால்சட்டை பையில் கைவிட்டு பணத்தை எடுத்து எண்ணி ராஜேந்திரன் பக்கம் நீட்டினான்.

“எவ்வளவு இருக்கு?”

“எண்ணி பாருங்க சார்”

“சொல்லுப்பா”

“இல்ல... இல்ல நீ சொல்லு”

“ரெண்டாயிரத்து ஐநூறு சார்”

“பத்து ஆட்டுக்கா. திருட்டு ஆடுகூட கிடைக்காது. நேத்தி இப்ராகிம் ராவுத்தர் நாலாயிரத்து ஐநூறுக்குக் கேட்டான். நான்தான் தர்லே”

“இல்ல சார் சின்ன குட்டிங்க சார். அதுவேற மெட்ராஸ் வரைக்கும் போகுனும் சார். லாரி கூலியெல்லாம் வேற இருக்கு.”

“இல்ல... இல்ல... இன்னும் ஐநூறு எடு-”

சப்-இன்ஸ்பெக்டர் பணத்தை பையில் திணித்துக்கொண்டு டிரைவர் முன்னே கையை நீட்டினான்.

“இருநூறுதான் சார். இருக்கு. டீசல் வேற போடணும்”

“நூறு எடு”

டிரைவர் ஒரு பழைய நூறுருபாய் நோட்டை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தான். அதை வாங்கி மேல்பையில் வைத்துக் கொண்டு “நம்ப ஆளா இருக்கே. எங்க