பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்



பாலகுமாரன்

சடதபற’ இதழில் முதல் சிறுகதை ஆசிரியராக அறிமுகமான பாலகுமாரன் தஞ்சை மாவட்டம் பழமாநேரியில் பிறந்தவர். தஞ்சையில் இலக்கிய தடம்பதித்த கு.ப.ரா., தி. ஜானகிராமன் வழியில் எழுதத் தொடங்கியவர். ஜானகிராமனின் தாக்கத்தை பெரும்பான்மையான படைப்புகளில் கண்டுகொள்ளலாம்.

இவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் பெண்களைப் பற்றியும், ஆண் பெண் வக்கிரங்களைப் பற்றியுமே பேசுகின்றன. பெண்களை அதிலும் அவர்கள் வக்கிர மனசையே பேசுவதால் இவரை ‘நவீன அருணகிரிநாதர்’ என்று சாடுவார் செ.யோகநாதன்.

இவரைப் பற்றி பலர் இப்படி அபிப்பிராயம் சொல்லுவதால், “இன்றைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆதாரமாக இருப்பது ஆண், பெண் உறவு. இப்படி மிக மோசமான நிலையில் இருக்கும் இதனைச் சரிசெய்யாமல் சமன்படுத்தாமல் வேறு எந்தச் பிரச்சனையையும் தீர்வு செய்ய முடியாது. நான் பசிக்கு தீனி போடுபவன். ருசிக்கு அலையாதீர்கள்..” என்று சமாதானம் சொன்னாலும் பின்னாளில் காசுக்காக மட்டுமே எழுதி குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் கும்பலில் இவரும் கரைந்துப் போனதால், அவர் செய்துள்ள ஆரம்பகால இலக்கிய முயற்சிகளும் கரைந்துபோய் கொண்டுதான் இருக்கின்றன.

1978 ஆம் ஆண்டு இலக்கிய சிந்தனையில் பரிசுபெற்ற ‘நெருடலை மீறி நின்று...’ கதைக்கு தி. ஜானகிராமன் இப்படி ஒரு குறிப்பு எழுதியுள்ளார். “செக்ஸ்-ஆண் பெண் கடல் ஒரு புனிதமான அத்யாவசியம் என்று சொல்ல பகவான் ரஜினீஸ் தேவை இல்லை. அதை உணர்த்த ஆதி மனிதர்கள் தட்டித் தடவி ஒரு மாதிரியாக கலியாணம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்... மிகவும் நுட்ப உணர்வோடு அமைந்த படைப்பு” என்று கூறுகிறார்.