பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

21


பொய்க் கணக்குச் சொல்லி, ஏதாவது புரட்டு ஜாதகத்தில் நாலு வாங்கி அனுப்பி விடுவான். போதும், ஆதியில் நாம் அவனோடு பட்டபாடு!”

“நீங்கள் பேசுவது நன்றாயிருக்கிறதே. உங்கள் மனம் போல் விட்டால் என்னையுந்தான் வேண்டாமென்பீர்கள். தனியாய் இந்தக் குடிகார ஜவான்களோடு பனங்காட்டில் திரிந்து கொண்டிருந்தால் போதும் உங்களுக்கு! ஆனால் ஈசுவரன் பெண்ணையும், பிள்ளையையும் கண் முடித்தனமாய்க் கொடுத்திருக்கிறானே; அதற்கென்ன செய்கிறது? துரசு வேண்டாமென்றால் நானே புறப்படுகிறேன், ஜாதகம் வாங்க. நீங்கள் ஒழிந்தபோது வரலாம்.”

“அதைப் பற்றி யோசிப்போம் கந்தரி. படபடத்தால் காரியம் ஆகுமா?” என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் மறுபடியும் ஏதோ ஒரு சுலோகத்தை மெதுவாய்ச் சொல்லலானார்.

இந்தச் சம்பாஷனை இடைகழித் திண்ணையில் நடந்து வந்தது. சுந்தரி சூடான காபியை ஆற்றுவது போல பாவணை பண்ணிக் கொண்டிருந்தவள் காபியிருந்த லோடாவைக் கொஞ்சங்கோபத்துடன் தன் கணவர் பக்கம் தள்ளினாள். பாவம்! லோடா சாய்ந்து காபியுங் கொட்டியது. லோடாவும் கொஞ்சம் உருண்டது. காபி, இடைகழித் திண்ணை யிலிருந்து குற்றால மலைச்சாரலிலின்று விழும் அருவி போலக் கீழே விழுந்தது.

பட்டு, கையில் ஒரு புஸ்தகத்துடன் வாசிப்பது போலப் பாவனை பண்ணிக் கொண்டு முற்றத்தில் உட்கார்ந்து இவர்கள் சம்பாஷணையைக் கவனித்து வந்தாள். சாஸ்திரியார் சற்று நிமிர்ந்து முற்றத்தை நோக்கினார். பட்டுவின் உருவம் அவர் கண்ணிற்பட்டது. தம் சாயல் தப்பின்றி அமைந்து அழகுடன் விளங்கும் குழந்தை பட்டுவைப் பார்த்துப் பெருமூச்செறிந்து, எப்படியேனும் இவ்வருஷம் விவாகத்தை நடத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டார்.


3

தங்கமான சாலவேடு ரேஞ்சில் பனைமரம் முத்திரை போடுங் காலத்தில் சாஸ்திரியாருக்கு வரும்படி சரியாய்க் கிடைக்கவில்லை. ஏனெனில், சாஸ்திரியார், பெண்ணின் விவாகத்துக்காக லீவில் போகப் போகிறாரென்று ஸால்ட் சேவகர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு கள்ளுக் கடைக்காரர்களுக்கு பகிரங்கப்படுத்திவிட்டார்கள். இது வெளிப்படவே மாமூலான பணங்கள் கிளம்பவில்லை. சாஸ்திரியார் எவ்வளவோ சிரமப்பட்டும் ரூ. 500 தான் சேர்ந்தது. அது ரயில் செலவுக்குக் கூடப் போதாதே என்றெண்ணி மறுபடியும் ஒரு நாள் சுந்தரியிடம் மெதுவாய்ச் சொல்லிப் பார்த்தார். ஒன்றும்