பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

229


புதுசை சலவைக்குப் போட்டுப் பழசாக்கிக் கட்டிக்கொள்வாள். ஊரிலுள்ள அத்தனை கோவிலுக்கும் விளக்குப் போடுவாள்.

அப்பா லூக்கோடர்மாவைப் பற்றி உலகத்திலுள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கிப் படித்தார். எத்தனைபிரிவு வைத்தியம் உண்டோ, அத்தனை வைத்தியத்துக்கும் காசை இறைத்தார். இன்னொரு குழந்தை இப்போது வேண்டாம் என்று இருந்தவர், இப்படி ஒரு குழந்தைக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் என்று அடங்கினார்.

என்னுடைய ஒரே பொழுதுபோக்கு, புத்தகங்கள். மனசுக்குப் பிடித்த ஒரே விஷயம், உத்தியோகம். ஆரம்பகாலத்தில் அடைந்து கிடந்ததும், அழுது தவித்ததும் மெல்ல மெல்லக் குறைந்து போயின. இந்த நோய் தீர்க்க முடியாதது என்று தெரிந்ததும் மனசின் வேதனைகள் மறைந்துபோயின. வேதனை இருந்த நெஞ்சில் வெறுமே ஒரு பள்ளம் இருந்தது. எங்கள் மூன்று பேருக்கும் இடையே எதுவும் பேசமுடியாமல் போயிற்று. இப்போ இந்த இரண்டு நாளாய் நான் சந்தோஷமாய் இருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாயிருக்கிறேன். இருபத்து நாலு வயகப்பெண் எதற்குச் சந்தோஷப்படுவாள்? தன்னை மறந்து நெஞ்சில் கை கோத்து எதற்குக் குதூகலப்படுவாள்? இயல்பாய் சுலபமாய் எதற்குப் பாட்டுப்பாடுவாள், சிரிப்பாள், கனவு காணுவாள்? யாரும் சட்டென்று ஊகித்துவிட முடியும்.

“எஸ். ஐ லவ் ஹிம். ஐ லவ் ஹிம். பத்ரிநாதன்." நேற்று பஸ் ஸ்டாண்ட் வரை அவர் மோட்டார் பைக்கில் சவாரி. இன்று தெரு முனை வரை மோட்டார் பைக் சவாரி வீட்டிற்குக் கூப்பிட்டேன். நாளைக்கு வருகிறாராம். “எத்தனை மணிக்கு வருவீங்க பத்ரி?”

“எப்ப வேணா...” தாங்க்யூ சொல்லக்கூடத் தோன்றவில்லை எனக்கு. வீட்டில் அவர் வரப்போவதைச் சொன்னேன். அப்பாவுக்கு ஆச்சரியம். உடனே ஓட்டடை அடிக்க ஆரம்பித்தார். நான் வீட்டிற்கு யாரையும் அழைத்ததில்லை. பள்ளிக்கூடத்தில், காலேஜில் நான் இப்போது வேலை செய்கிற ஆபீஸில் யாரும் என் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டதில்லை.

“மேடம், உங்க முகத்தில் வெள்ளை வெள்ளையாய் இருக்கே இது என்ன- இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். அது என்ன என்று தெரிந்து பிறகுகூடக் கேள்வி கேட்பார்கள். இதற்கு என்ன வைத்தியம் என்று அலசுவார்கள். ஒட்டிக்குமோ, ஆபீஸ் பேப்பரைப் பயத்துடன் வாங்குவார்கள். உடம்பில் வேறு எங்கேயாவது வெள்ளை தென்படுகிறதா என்று நான் அறியாதபடி பார்வையால் தேடுவார்கள். வலக் கன்னத்திலும், இடக்