பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

239



“ராஜூ! வாப்பா சிக்கிரம்...” என்றான் டிரைவர்.

பாலு அய்யரும் ராஜூவும் தனியாகப் போய் ஏதோ இரகஸ்யமாகப் பேசுவது போல், கீழ்க் குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். டிரைவரின் குரல் கேட்டதும், ராஜூ அவசர அவசரமாக வந்து வண்டியில் ஏறினான்.

“என்னப்பா எங்களையெல்லாம் ‘அம்போ’ன்னு விட்டுட்டே...” என்றார் பஸ்ஸில் வந்த பிரயாணிகளில் ஒருவர்.

“அதுதான் கும்பகோணம் வந்தாச்சேய்யா... டவுன் பஸ்லே போங்க... ஒரு உசிரு மன்றாடிகிட்டிருக்கு... வீட்டிலே ஏன் கொண்டு விடல்லேன்னு கேக்கறாரு, இவரு...”

“இதுக்கு நாங்கதானா பொணை ? நீ செஞ்ச தப்புக்கு யார் மேலே கோவிச்சிக்கறே?”

“சரிதான், வண்டியை விட்டு இறங்குங்க. ஸ்டார்ட் பண்ணனும்...”

“நான் உங்க முதலாளி கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிக்கிறேன்... திமிராவா பேசறே?”

டிரைவர் ஆசனத்தை விட்டு எழுந்து அந்தப் பிரயாணியிடம் வந்தான்.

‘நீ மனுஷன்தானே, இல்லாட்டி மிருகமா? அதோ அந்தப் பச்சைப்புள்ளை கிடக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலே... கோபத்திலே நான் என்ன செய்வேன்னு தெரியாது.”

அவர் முணுமுணுத்துக் கொண்டே கீழே இறங்கிவிட்டார்.

பஸ் புறப்பட்டது. ராஜூ சொன்னான். “வேலு அண்ணே, நான் செய்யறது தப்புத்தான்... திண்ணையிலே இடிச்சதினாலே ‘டெயில்லைட்’ நொறுங்கிப் போயிடிச்சி. இதைத் தவிர இன்னும் ‘பாடி'க்கு வேற ‘டாமேஜ்’... முதலாளிக்குப் பதில் சொல்லியாகணும்... போலீஸ் வர்றதுக்குள்ளே நாம் புறப்பட்டு வந்தது அவ்வளவு சரியில்லே.”

“நீ வாயை மூடிக்கிட்டு இரு... எல்லாப் பொறுப்பையும் நான் ஏத்துக்கறேன்...”

“குழந்தை பொழைப்பானா டிரைவர்?” “நிச்சயமா. பொழைப்பான், கவலைப்படாதீங்க... என்னோட போறாத காலம்...” டிரைவரின் குரல் கம்மியது.

“சன்னரத் தாழ்வான் கோயிலை ஒரு கத்து சுத்திட்டு வருவோம்னுதான் போனேன்... அதுக்குப் பலன் இப்படியா இருக்கணும்?” அம்பியின் அம்மா சிறிது நேரம் மெளனமாக இருந்தவள், மறுபடியும் புலம்பத் தொடங்கிவிட்டாள்.

“பெரியம்மா, அழுவாதிங்க... எல்லாம் நல்லபடியா சரியாயிடும்.” இதை வேலு சொன்னானே தவிர, அவன் சொன்னதில் அவனுக்கே நம்பிக்கையில்லை... எப்படிச் சரியாயிடும்? இரண்டு பாதங்களும் நசுங்கிவிட்டன. விரல்கள்