பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

241


அவள் அவன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. கீழே இறங்கி ஸ்டெரச்சரைத் தொடர்ந்து மிக வேகமாக ஆஸ்பத்திரிக்குள் சென்றாள்.

உள்ளே நர்ஸ் ராஜூவிடம் கூறிக் கொண்டிருந்தாள்; “இது போலீஸ் விவகாரம். நாங்க எப்படி ‘அட்மிட்’ பண்ணறது?”

ராஜூ வேலுவைத் திரும்பிப் பார்த்தான். “நான் தான் அப்பவே சொன்னேண்ணே, போலீஸ் வரக் கொள்ள நாம் வந்திருக்கக்கூடாது...”

வேலு நர்ஸிடம் மிக நிதானமாகத் தான் பேசினான். “முதலில் பையனை ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துட்டு போங்கம்மா, அதான் முக்கியம்... நான் போலீசுக்கு இதோ ஃபோன் பண்றேன்.”

நர்ஸ் புன்னகை செய்தாள். “நோ...ரூல்படிப் பார்த்தா...” அவள் சொல்லிக் கொண்டிருந்ததை முழுவதும் வேலு கேட்கவில்லை. டாக்டர் அறையை நோக்கி மிக வேகமாகச் சென்றான்.

நர்ஸ் கூப்பிட்டாள். “டிரைவர்.டிரைவர்.”

அந்த டாக்டர் இளைஞன். பெயர் ரவி. முப்பது வயதுக்குள் தானிருக்கும். குறுந்தாடி வைத்திருந்தான். வேலு சொன்னதை அவன் அமைதியாகக் கேட்டான். சொல்லப் போனால், கேட்பது போலிருந்தான். அவன் கை வேறொரு நோயாளிக்கு மருந்து எழுதிக் கொண்டிருந்தது.

“நர்ஸைக் கூப்பிடுங்க...” என்றான் ரவி. அதற்குள் அவளே வந்துவிட்டாள்.

“பையனை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போங்க.”

“டாக்டர். இது போலீஸ் கேஸ்...”

“ஐ நோ... டிரைவர், நீங்க போய் போலீசுக்குப் ஃபோன் பண்ணுங்க...”

“போலீஸ் பையனோட கண்டிஷனைப் பார்த்தப்புறம் ஆபரேஷன் பண்ணறது நல்லது டாக்டர்.”

“மிஸ் தாமஸ், கைன்ட்லி டு வாட் ஐ ஸே...”

டாக்டர் எழுந்தான்...

ஆபரேஷன் தியேட்டருக்குள் அம்பி இருந்தபோது, போலீஸ் வந்தது. ராஜூ ஃபோன் செய்து, முதலாளியையும் வரவழைத்துவிட்டான். இன்ஸ்பெக்டர் முதலாளி வந்ததும் கேட்டார்; “நம்ம வண்டிதானுங்களா?”

“ஆமாம். என்ன வேலு இப்படிச் செய்திட்டே?”

வேலு பதில் சொல்லவில்லை. அவனுக்கு முதலாளியைக் கண்டால் பிடிக்காது. முப்பத்தைந்து வயதுக்குள், கட்சி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு, திருட்டுத்தனமாக