பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

243


இருக்குது... வக்கீலுக்கு சொல்லியா கொடுக்கணும்? கோர்ட் கேஸ் ஆகாமப் பார்த்துக்கறேன். பையனோட அம்மாவுக்குக் கையிலே கொஞ்சம் வைச்சு அழுத்தினா சரிம்பாங்கன்னுதான் நினைக்கிறேன்... ஏழைக் குடும்பந்தான் போலிருக்குது...”

“நான் பொய் சொல்லமாட்டேன்.”

“அட சீ, சொல்றத்தைக் கேப்பியா? உன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிறத்திலே என்ன லாபம்? இன்னொண்ணு நினைவு வச்சுக்க, போலீஸ் நான் சொல்லறதைத் தான் கேக்கும்...”

“உங்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி கொடுத்துடப் போறாங்க... நான் தான் ஜெயிலுக்குப் போகப்போறேன். என்னைக் காப்பாத்தணும்னு உங்களுக்கு என்ன இவ்வளவு தீவிரம்?”

“கோர்ட் கேஸ் ஆகக் கூடாதுண்ணுதான் பாக்கறேன். உன்னைப் பத்தி எனக்குக் கவலையில்லே...”

“ஓ! கோர்ட்லே ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்பாங்க... டூரிஸ்ட் விவகாரம் எல்லாம் அடிபடும்... அதுக்காகச் சொல்றீங்களா?” -

“ஏன் நடுரோட்லே நின்னுகிட்டு கத்தறே? மெதுவாய் பேசேன். எனக்கென்ன காது செவிடா?”

“அந்தப் பையன் செத்துப் போயிட்டா என்ன செய்வீங்க?”

“அதைப்பத்தி நீ கவலைப்படாதே... நான் சொல்றபடி கையெழுத்துப் போட்டுத் தா... சீக்கிரம், ஹீம்... அந்த அம்மா கிட்டே பக்குவமாப் பேசி இன்ஸ்பெக்டர் ஒரு “ஸ்டேட்மெண்ட் வாங்கிப்பாரு.” -

“என் மனசக்குச் சரியா படலே, நீங்க செய்யறது.”

“இது என்னடா கஷ்ட காலம்? அரிச்சந்திரனையெல்லாம் டிரைவரா வெச்சுக்கிட்டு, ரோதனையா போச்சு... நீ, நான் சொல்றபடி செய்யப் போறயா இல்லையா? உன் குடும்பத்தைத் தூக்கிக் கிணத்திலே போடணும்னா, உன் விருப்பப்படி செய்... என்னதான் ஆனாலும், கடைசியிலே நான்தான் ஜெயிக்கப் போறேன், அதை நினைவு வெச்சுக்க...”

வேலுவுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. முதலாளி மந்திரிகளுக்கு நெருங்கியவன் என்பது அவனுக்குத் தெரியும். அவன் சொல்லுவதுபோல் நிச்சயமாக அவன் ஜெயிக்கத்தான் போகிறான். உண்மைக்காகப் போராடி ஒருவன் ஜெயிலுக்குப் போவதினால், யாருக்கு என்ன பிரயோஜனம்? அவன் குடும்பம் அவனை காந்தி என்றோ, ஏசு என்றோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. வாழ்நாள் முழுவதும் தூற்றிக் கொண்டு இருக்கப் போகிறார்கள். அந்த அம்மாவுக்குத்தான் என்ன பயன்? அந்தப் பையனோட கால் திரும்பியா