பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

சோலை சுந்தரபெருமாள்


வரப்போகிறது. அந்த அம்மாவுக்கு எவ்வளவு தரப் போகிறான். இந்தப் படுபாவி? தனக்கும் ஏதாவது கொடுத்தானானால், அதையும் சேர்த்து அந்த அம்மாவிடம் கொடுக்கலாம். இந்த அளவுக்குத் திருப்திப்பட்டுக் கொள்ளுவதைத் தவிர அவனால் வேறு என்ன செய்யமுடியும்?

“அவங்களுக்கு எவ்வளவு தரப் போறீங்க?’ என்று கேட்டான் வேலு.

“எவங்களுக்கு?”

“அந்த அம்மாவுக்கு...”

“அதைப்பத்தி உனக்கென்ன கவலை?”

“நானும் பிள்ளைகுட்டிக்காரன்...”

“வாய்யா வா... பெரிய நியாயம், அநியாயமில்ல பார்த்துக்கிட்டிருந்தீங்க இத்தனை நேரம்? இதுக்குத்தானா? சரி ஏதானும் தரேன், வாங்கிக்க...”

“ஏதானும்னா எவ்வளவு?”

“குழந்தை மேலே வண்டியை ஏத்திட்டு பேரம் வேற பேசறியா? ஒரு பச்சை நோட்டுத் தரேன், ஒளிஞ்சி போ...”

“பத்தாது.”

“அடச் சீ!... உன் விருப்பப்படி என்ன ‘ஸ்டேட்மெண்ட்” வேணுமானாலும் கொடுத்துக்க... இதுக்கு மேலே ஒரு பைசா கிடையாது.”

வேலு பதில் கூறாமல் திரும்பினான்.

“அவ்வளவு திமிரா உனக்கு?... உனக்கு அழுவறது தெரிஞ்சா, ராஜூ சும்மா விடுவானா? அவனுக்கு வேற அழுதாவணும். சரி, இரண்டு வாங்கிக்க... போ... அதுக்கு மேலே பிச்சுப் பிடுங்காதே...”

வேலு யோசித்தான். இதற்குமேல் இவன் தரமாட்டான். தான் வாங்கிக் கொள்வது தப்புதான்... என்ன செய்ய? அரிச்சந்திரனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும், தான் கடைசி மட்டும் உறுதியாக நின்றால், கத்தி மாலையாக விழுமென்று, ஆனால் இந்தக் காலத்தில் கத்தி கத்தியாகத்தானிருக்கும்; மாலை போட்டுக் கொள்கிறவர்கள் நட்சத்திரேயர்கள்.

“என்ன, சரியா? சிக்கிரம் சொல்லு.” என்றான் முதலாளி.

“சரிங்க.”

இருவரும் உள்ளே சென்றபோது, இன்ஸ்பெக்டர் யாரோ இருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பையனுக்கு உறவுக்காரர்களாக இருக்க வேண்டுமென்று நினைத்தான் வேலு.

இன்ஸ்பெக்டர், “இவங்க அந்தப் பையனோட அக்காவாம், ஸ்கூல் டீச்சரா இருக்காங்களாம், இவரு அவங்க ஹஸ்பெண்ட், தாலுக்கா ஆபீஸ்ல இருக்காரு.”