பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

சோலை சுந்தரபெருமாள்


“என்ன பேசணும்?.ஐ ஹாவ் நதிங் டு டு வித் யு.

“சரி, உங்க ரிபோர்ட்டைக் கொடுங்க... உள்ளே போகலாமா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

அவர்கள் இருவரும் உள்ளே சென்ற பிறகு, முதலாளி ராஜூவைத் தனியாக அழைத்துக் கொண்டு போய்க் கூறினார். “பாலு அய்யர்கிட்டே பேசிப் பாரு...”

”பேச வேண்டாம்... ஒத்துக்கிற ஆள்தான்.” என்று முணுமுணுத்தான் ராஜூ”

“எவ்வளவு?”

“பெரிய ஒண்ணுக்குக் குறைஞ்சு வாங்கமாட்டார்னு தோணுது... பேசிப் பார்ப்போம்.”

“உனக்குண்டா இதிலே கமிஷன்”

“என்னங்க முதலாளி இப்படிப் பேகறீங்க? பாலு அய்யர் அங்கே இல்லேன்னு பொய்ச் சொல்லச் சொல்றீங்களா? அது நியாயமில்லே...”

“வேலுவுக்கு ரெண்டு, உனக்கு ரெண்டு, பாலு அய்யருக்கு அஞ்சு... வக்கீல் குமாஸ்தா பார்ப்பான், இதுக்குக் குறைஞ்சு வாங்கமாட்டான், சீக்கிரம் கேட்டுச் சொல்லு.”

“எட்டு மட்டும் போலாங்களா? அவரையே கொண்டு அந்தப் பையனோட அக்காவையும் அவங்க புருஷனையும் சமாளிக்கச் சொல்றேன்...”

“சரி. எதை வேணுமானாலும் பண்ணு. போய்த் தொலை!” முதலாளிக்கு எரிச்சல் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பதை உணர்ந்த ராஜூ, அந்த இடத்தை விட்டு அகன்றான்.

அம்பியின் அம்மா திடீரென்று சிரிக்க ஆரம்பித்தாள். எல்லோரும் திடுக்கிட்டு அவள் பக்கம் திரும்பினர்.

“அம்பி... என்னடா விளையாட்டு இது... அம்பி...அம்பி...” என்று பலமாக, சப்தம் போட்டுக்கொண்டே குறுக்கும், நெடுக்குமாக ஓடத் தொடங்கிவிட்டாள்.

நாலைந்து பேராக அவளைக் கட்டிப் பிடித்து உட்கார வைத்தனர். அம்பியின் அக்கா அவளருகே சென்ற, “அம்மா, அம்மா, என்னம்மா இது” என்று அழாக் குறையாகக் கேட்டாள். வேலு, அவள் கைகளை இறுக்கப் பற்றிக் கெண்டே சொன்னான். “பெரியம்மா! என்னை நம்புங்க, உங்க பையன் பொழைச்சிடுவான்.”

“ஆமாம் பொழைச்சிடுவான், நிச்சயமா பொழைச்சிடுவான்” வறுை தலையை ஆட்டிக் கொண்டே அவள் சொல்லிவிட்டு, உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள்.

ரவி வெளியே வந்தான். ‘வாட் ஈஸ் திஸ்?...”

நர்ஸ் அவரிடம் விரைவாக வந்து சொன்னாள்: ‘ஷி ஹாஸ் பிகம் இன்ஸேன்.”